கொரோனா தொற்று - மதுரை ஆஸ்பத்திரிகளில் படுக்கைகள் நிரம்பியது.

கொரோனா தொற்று - மதுரை ஆஸ்பத்திரிகளில் படுக்கைகள் நிரம்பியது.
X
ராஜாஜி மருத்துவமனை உள்பட 7 அரசு மருத்துவமனைகள்.

கொரோனா நோய் தொற்று அதிகரிப்பால் மதுரை ஆஸ்பத்திரிகளில் படுக்கைகள் நிரம்பியது

மதுரை மாவட்டத்தில் கொரோனா 2-வது அலை வேகமாக பரவுகிறது. இதன் காரணமாக தினமும் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் நோய்த் தொற்றுக்கு இலக்காகி வருகின்றனர்.

மதுரையில் ஒரே நாளில் 1231பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர். இருந்தபோதிலும் 619 பேருக்கு நோய் குணமாகி பத்திரமாக வீடு திரும்பி உள்ளனர்.

இதற்கிடையே மதுரையில் ஒரே நாளில் 17 பேர் கொரோனாவுக்கு பலியாகி உள்ளனர். இதன் வாயிலாக மதுரை மாவட்டத்தில் ஒட்டு மொத்தமாக பலியானோரின் எண்ணிக்கை 203ஆக உயர்ந்துள்ளது.கடந்த ஒரு மாதத்தில் மதுரை அரசு மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகளில் இன்று வரை 6,262 பேருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

மதுரை மாவட்டத்தில் 7 கொரோனா சிறப்பு வார்டுகள் உள்ளன. இங்கு 1681படுக்கை வசதிகள் உண்டு. இதில் 1438பேர் அனுமதிக்கப்பட்டு சிகிச்சையில் இருந்து வருகின்றனர்.

மதுரை மாவட்டத்தில் ராஜாஜி மருத்துவமனை உள்பட 7 அரசு மருத்துவமனைகள் உள்ளன. இங்கு தற்போது வரையில் 243 படுக்கை வசதிகள் மட்டுமே காலியாக உள்ளது.

அரசு மருத்துவமனைகளில் ஆக்சிஜன் வசதி கொண்ட படுக்கை மதுரை மாவட்டத்தைப் பொருத்தவரை நாள் ஒன்றுக்கு 8 ஆயிரத்துக்கும் அதிகமானோருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது. இதுவரையில் 15,59,687 பேருக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு உள்ளது. வீட்டில்3,621பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags

Next Story
ai and business intelligence