முதல் அலை - மருத்துவ கட்டமைப்பை சீரமைக்கவில்லை - அமைச்சர் குற்றச்சாட்டு
கரோனா பெருந்தொற்றின் முதல் அறையிலேயே மருத்துவ கட்டமைப்புகளை சிறு செய்திருந்தால் இரண்டாவது அலையில் இத்தனை பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது என மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்
மதுரையில் கரோனோ தடுப்பு நடவடிக்கை குறித்து மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. மதுரை ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்ரமணியன், நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன், வணிக வரித்துறை அமைச்சர் மூர்த்தி, மதுரை ஆட்சியர் அன்பழகன், நாடாளுமன்ற உறுப்பினர் சு. வெங்கடேசன், விருதுநகர் நாடாளுமன்ற உறுப்பினர் மாணிக்கம் தாகூர் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
மதுரை மாவட்டத்தில் கரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் அதன் பரவலைக் கட்டுப்படுத்துவது, பாதிக்கப்பட்டவர்களுக்கு முறையான சிகிச்சை அளிப்பது, ஆக்சிஜன் பற்றாக்குறையை போக்குவது தொடர்பாக ஆலோசிக்கப்பட்டது.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் மா. சுப்ரமணியன், மதுரையில் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகள் சிறப்பாக பணியாற்றி வருகின்றன. மதுரைக்கு கூடுதல் படுக்கை ஆக்சிஜன் வசதிகள் கூடுதலாக ஏற்படுத்தி தர முதல்வருக்கு பரிந்துரை செய்யப்படும்.மதுரை அரசு மருத்துவமனையில் மொத்தம் 1681 படுக்கைகள் உள்ள நிலையில் மொத்தமுள்ள 1176 ஆக்சிஜன் படுகைகள் முழுமையாக நிரம்பி வழியும் நிலையில் ஜீரோ டிலே என்ற 150 படுக்கை வசதி கொண்ட பிரத்யேக வார்டு அமைக்கப்பட்டு மக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட உள்ளது
தனியார் நிறுவன உதவியோடு மதுரை தோப்பூரில் கூடுதலாக 500 படுக்கை வசதிகள் செய்வதற்கான பணிகள் நாளை முதல் துவங்கி ஒரு வாரத்திற்குள் 500 ஆக்சிஜன் படுக்கைகள் பயன்பாட்டிற்கு வரும். முதல் அலையில் மருத்துவ கட்டமைப்பை சீராக செய்திருந்தால் 2ம் அலையில் இந்த அளவிற்கு பாதிப்பு ஏற்பட்டிருக்காது. தற்போது 2ஆம் அலையில் சீராக கட்டமைப்பு செய்துள்ளதால் 3ஆம் அலையை எளிதில் எதிர்கொள்ள முடியும்
கரோனா மரணங்கள் மறைக்கப்படுவது எந்த விதத்திலும் சரியானதாக இருக்காது ரெம்டெசிவிர் மருந்தை கள்ளச்சந்தையில் விற்பனை செய்வது மனசாட்சி இல்லாதவர்களின் செயல். ரெம்டெசிவிர் மருந்து கள்ளச்சந்தையில் விற்பனை செய்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். மதுரைக்கு ரெம்டெசிவிர் மருந்து கூடுதலாக வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu