மணல் ஓவியம் மூலம் தேர்தல் விழிப்புணர்வு

மணல் ஓவியம் மூலம் தேர்தல் விழிப்புணர்வு
X

மதுரையில் மணல் ஓவியம் மூலம் தேர்தல் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

த‌மிழ‌கத்தில்‌ ச‌ட்ட‌சபை தேர்த‌ல் வருகிற ஏப்ரல் 6 ம் தேதி ஒரே கட்டமாக ந‌டைபெற‌ உள்ளது. தமிழகத்தில் தற்போதுள்ள அரசியல் கட்சிகள் அனைவரும் தொகுதி ப‌ங்கீடு, கூட்ட‌ணி பேச்சுவார்த்தை, வேட்பாளர்கள் நேர்காணல் ஆகிய‌வை விறுவிறுப்பாக ந‌டைபெற்று வ‌ருகிற‌து. இந்நிலையில் தேர்தல் ஆணையம் சார்பாக மாவட்டம் தோறும் பொதுமக்களுக்கு 100 சதவீதம் வாக்களிப்பதன் அவசியம் குறித்தும், வாக்குகள் விற்பனைக்கு அல்ல என்பது போன்ற விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் மாவட்ட நிர்வாகம் சார்பில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

அவ்வகையில் மதுரை பெத்தானியாபுரம் பகுதியில் தலைமை செயலகத்தை மணல் ஓவியமாக வரைந்தும், கலைநிகழ்ச்சிகள் மூலம் வாக்காளர்களுக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் மதுரை மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் அன்பழகன் பங்கேற்று மணல் ஓவியத்தை பார்வையிட்டதுடன், நேர்மையான முறையில் வாக்களிக்க வேண்டும் என்பதற்காக உறுதிமொழியேற்று பின்னர் இருசக்கர வாகன விழிப்புணர்வு பேரணியை கொடியசைத்து துவக்கி வைத்தார்.

Tags

Next Story
100% இத மட்டும் ஃபாலோ பண்ணுங்க.. ஒரே மாசத்துல 10,12 கிலோ எடை குறையலாம்..! ரொம்ப ஈஸியா..! | Easy weight loss diet plan in Tamil