மகளிர் வாக்காளர் விழிப்புணர்வு பேரணி
உலக மகளிர் தினத்தை முன்னிட்டு மதுரையில் மகளிர் வாக்காளர் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.
இன்று உலக மகளிர் தினம் உலகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது. மகளிர் தினத்தை கொண்டாடும் வகையிலும் மேலும் வரும் சட்டமன்ற தேர்தலையொட்டி விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையிலும் மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மகளிர் தின விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் ஏராளமான பெண்கள் ஆர்வமுடன் கலந்துகொண்டு 100 சதவீதம் வாக்களிப்போம், வாக்களிப்பது நம் கடமை என்பதை உணர்த்தும் வகையில் கோலமிட்டனர்.
பின்னர் பாரம்பரிய கலை நிகழ்ச்சிகளுடன் நடைபெற்ற மகளிர் வாக்காளர் விழிப்புணர்வு பேரணியை மாவட்டஆட்சியர் கொடியசைத்து துவக்கி வைத்தார்.தொடர்ந்து வருகின்ற சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு சட்டமன்ற தேர்தல் அழைப்பிதழை மாவட்ட ஆட்சியர் அன்பழகன் பொது மக்களுக்கு வழங்கினார்.பின்னர் பேட்டியளித்த ஆட்சியர், அனைவரும் தவறாமல் 100 சதவீதம் வாக்களிக்க வேண்டும். வாக்களிப்பது நமது கடமை, மேலும் சட்டமன்ற தேர்தலையொட்டி மதுரை மாவட்டம் முழுவதும் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது என்று கூறினார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu