/* */

பெட்ரோல், டீசல் விலை ஜிஎஸ்டிக்குள் வர வாய்ப்பு -அமைச்சர் சூசகம்

பெட்ரோல், டீசல் விலை ஜிஎஸ்டிக்குள் வர வாய்ப்பு -அமைச்சர் சூசகம்
X

பெட்ரோல், டீசல் விலை ஜிஎஸ்டி வரம்புக்குள் கொண்டு வரப்படலாம் என அமைச்சர் விகே சிங் மதுரையில் கூறினார்.

மதுரையில் ஸ்ரீ ராமஜென்ம பூமி தீர்த்த சேத்திர அறக்கட்டளை சார்பாக ராம ரத யாத்திரை தொடங்கி வைக்க வருகை தந்த மத்திய கப்பல் மற்றும் சாலை போக்குவரத்து துறை இணை அமைச்சர் விகே.சிங் செய்தியாளர்களிடம் பேசும் போது, ராமர் ஆலயம் கட்டப்படுவதற்கு நாடு முழுவதும் உள்ள மக்கள் வரவேற்பு தெரிவித்து வருகின்றனர். ராமர் ஆலயம் கட்டப்படுவதோடு ராம ராஜ்ஜியம் உருவாக்கப்படும். தமிழகத்தில் பாஜக நல்ல வளர்ச்சியடைந்துள்ளது. பாஜகவுக்கு மக்கள் ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.பெட்ரோல், டீசல் விலை உயர்வு என்பது சுழற்சிமுறையில் ஆனது.

சர்வதேச நிலவரத்திற்கு ஏற்ப விலை நிலவரங்கள் மாறிக்கொண்டே இருக்கும்.கடந்த 2011 - 2014 ஆண்டுகளில் கேஸ் விலை ரூ. 1240 ஆக இருந்தது. தற்போது ரூ.750 என்ற அளவில் தான் உள்ளது. பெட்ரோல் விலை உயர்வு மக்களை பாதிக்காமல் இருக்க மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக பெட்ரோல், டீசல் விற்பனையில் ஜிஎஸ்டி வரம்புக்குள் கொண்டு வரப்படலாம் என்ற ஆலோசனையும் உள்ளது. மேலும் இது தொடர்பாக மாநிலங்களும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விகே சிங் கூறினார்.

Updated On: 5 March 2021 11:50 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    வீட்டிலேயே வலி நிவாரணி எண்ணெய் தயாரிப்பது எப்படி?
  2. லைஃப்ஸ்டைல்
    வெறும் வயிற்றில் கற்றாழை சாறு அருந்துவதால் கிடைக்கும் நன்மைகள் பற்றி...
  3. ஆன்மீகம்
    பழனியில் வரும் ஆகஸ்ட் மாதத்தில், உலக முருக பக்தர்கள் மாநாடு
  4. லைஃப்ஸ்டைல்
    பெண்களுக்கு 7 மணி நேர தூக்கம் போதுமா..? ஆய்வு என்ன சொல்லுது?
  5. லைஃப்ஸ்டைல்
    இரவில் சாப்பிடுவதால் உடல் பருமனை அதிகரிக்கும் 5 உணவுகள் என்னென்ன...
  6. லைஃப்ஸ்டைல்
    சுவையான வத்தக்குழம்பு செய்வது எப்படி?
  7. லைஃப்ஸ்டைல்
    கோடை காலத்தில் தேனின் மருத்துவ குணங்களை தெரிஞ்சுக்குங்க!
  8. தென்காசி
    10ம் வகுப்பில் அதிக மதிப்பெண் எடுத்த மாணவ,மாணவிகளுக்கு பாராட்டு...
  9. சுற்றுலா
    அண்டார்டிகாவில் ஒழுங்குபடுத்தப்பட்ட சுற்றுலா: சுற்றுச்சூழலை காப்பாற்ற...
  10. லைஃப்ஸ்டைல்
    பதப்படுத்தப்பட்ட உணவுகளை உட்கொள்வது ஆபத்து! ஹார்வர்ட் பல்கலைகழக ஆய்வு