இணையதள பண பரிவர்த்தனைகள் தீவிர கண்காணிப்பு

இணையதள பண பரிவர்த்தனைகள் தீவிர கண்காணிப்பு
X

இணையதளம் வாயிலாக நடைபெறும் பண பரிவர்த்தனைகள் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகின்றது என மதுரை மாவட்ட ஆட்சியர் அன்பழகன் கூறினார்.

2021 சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வாக்காளர் விழிப்புணர்வு கையெழுத்து இயக்கத்தை தொடங்கி வைத்த மதுரை மாவட்ட தேர்தல் அலுவலரும், கலெக்டருமான அன்பழகன் செய்தியாளர்களிடம் கூறுகையில் நேர்மையான, அமைதியான தேர்தலை நடத்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. இணைய தளம் வாயிலாக நடைபெறும் பண பரிவர்த்தனைகள் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது.

ஒரு நபரின் வங்கி கணக்கில் இருந்து பல்வேறு நபர்களுக்கு பணம் செலுத்தப்பட்டால் விசாரணை நடத்தப்படும். தேர்தல்களம் சூடு பிடிக்காத காரணத்தால் மதுரை மாவட்டத்தில் இதுவரை எந்தவொரு பணமும், பொருட்களும் பறிமுதல் செய்யப்படவில்லை, தேர்தல் விதிமுறை மீறல்கள் தொடர்பாக வரும் புகார்கள் உடனுக்குடன் விசாரிக்கப்பட்டு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றதுஎன கூறினார்.

Tags

Next Story
பவானிசாகர் தொகுதியில் புதிய குடிநீர் திட்டங்கள்: 1 கோடி வளர்ச்சி பணிகள் ஆரம்பம்