பொதுமக்களுக்கு வாக்குப்பதிவு குறித்த விழிப்புணர்வு

பொதுமக்களுக்கு வாக்குப்பதிவு குறித்த விழிப்புணர்வு
X

சட்டமன்ற தேர்தலையொட்டி மதுரையில் வாக்குப்பதிவு இயந்திரத்தில் பொதுமக்கள் வாக்களிப்பது குறித்த விழிப்புணர்வு அலுவலர்களால் அளிக்கப்பட்டது.

தமிழக சட்டமன்ற தேர்தல் ஒரே கட்டமாக வரும் ஏப்ரல் மாதம் 6-ஆம் தேதி நடைபெறுகிறது. இந்நிலையில் சட்டமன்ற தேர்தலில் பொதுமக்கள் மற்றும் இளம் வாக்காளர்கள் வாக்குபதிவு இயந்திரத்தில் வாக்களிப்பது குறித்து மதுரையில் தேர்தல் அலுவலர்கள் மாதிரி வாக்குப்பதிவு இயந்திரத்தை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர். மதுரை கலெக்டர் அலுவலகம் அருகே நடைபெற்ற இந்த விழிப்புணர்வில் ஏராளமான பொதுமக்கள் மற்றும் இளம் வாக்காளர்கள் கலந்து கொண்டு வாக்குப்பதிவு இயந்திரத்தில் வாக்களிப்பது தொடர்பாக சந்தேங்களை கேட்டு தெரிந்து கொண்டனர்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!