கள்ளழகர் ஆற்றில் இறங்கும் நிகழ்வு- ஏற்பாடுகள் தீவிரம்

கள்ளழகர் ஆற்றில் இறங்கும் நிகழ்வு- ஏற்பாடுகள் தீவிரம்
X

மதுரையில் பிரசித்தி பெற்ற கள்ளழகர் வைகை ஆற்றில் எழுந்தருளும் நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது.

மதுரையில் பிரசித்தி பெற்ற சித்திரை திருவிழா வெகு விமர்சையாக நடைபெற உள்ளது. விழாவின் முக்கிய நிகழ்வான கள்ளழகர் தங்கக் குதிரை வாகனத்தில் வைகை ஆற்றில் எழுந்தருளும் வைபவம் வரும் ஏப்ரல் மாதம் 27-ம் தேதி நடைபெறுகிறது. இதற்காக ஆழ்வார்புரம் பகுதி வைகையாற்றில் கடந்த ஆண்டு நிரந்தரமாக பாலம் அமைக்கும் பணி நடைபெற்றது. இதையடுத்து வைகை ஆற்றுக்குள் தற்காலிகமாக மேடை அமைக்கும் பணி தொடங்கியது. இதற்காக மதுரை மாநகராட்சி சார்பில் பொக்லைன் எந்திரம் மூலம் செம்மண் கொட்டி மேடை அமைக்கும் பணியில் ஈடுபட்டு உள்ளனர்.

Tags

Next Story
அறச்சலூா்: 200 மாணவர்களின் படைப்புகளுடன் அறிவியல் கண்காட்சி வெற்றிகரமாக முடிந்தது!