பாகன் உடன் கொஞ்சி விளையாடும் யானை: வைரலாகும் காட்சி

பாகன் உடன் கொஞ்சி விளையாடும் யானை: வைரலாகும் காட்சி
X
பாகன் உடன் கொஞ்சி விளையாடும் படைவீட்டு கோவில் யானை லட்சுமி வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

கோவை மாவட்டம் தேக்கம்பட்டி வனப்பகுதியில் யானைகளுக்கான சிறப்பு நலவாழ்வு முகாம் நடைபெற்று வருகிறது. இந்த முகாம்களில் தமிழகமெங்கும் கோவில்களில் இருக்கக்கூடிய கோவில் யானைகள் பாகங்களுடன் தங்க வைக்கப்பட்டுள்ள நிலையில், ஒவ்வொரு நாளும் யானைகளுக்கு சத்துள்ள உணவுகள் நீர் விளையாட்டு உள்ளிட்ட பல்வேறு வகையான புத்துணர்வு பயிற்சிகளுடன் அளிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் சில நாட்களுக்கு முன்பு ஸ்ரீவில்லிபுத்தூர் கோவில் யானையை அதன் பாகங்கள் இருவர் கடுமையாக தாக்க கூடிய காட்சி வைரலாக வந்தது. அதனை தொடர்ந்து வனத்துறை அதிகாரிகள் பலரை கைது செய்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த நிலையில் யானைகளுக்கான புத்துணர்வு முகாமில் படைவீடு கோவில் யானை லட்சுமி தனது மகனுடன் கொஞ்சி விளையாடக் கூடிய காட்சியும் யானையை பிரிந்து சென்ற பாகனை யானை தேடுவதும், அவர் மீண்டும் வந்ததும் ஒரு குழந்தை தனது தந்தையை கண்டவுடன் கட்டி அணைப்பது போன்று தனது துதிக்கையால் அந்தப் பாகனை அணைக்கும் காட்சி தற்போது சமூக வலைதளங்களில் வைரல் ஆகி காண்போரை மெய்சிலிர்க்க வைக்கிறது.

யானைகளுக்கான புத்துணர்வு முகாம் ஒருபுறம் நடந்து கொண்டிருந்தாலும், யானைக்கு பாகனுக்குமான உறவு ஒரு தந்தைக்கும் மகனுக்கு உறவாக இருக்கும் காட்சிகள் காண்போரை மெய்சிலிர்க்க வைத்தது.

Tags

Next Story
ai in future agriculture