மதுரை விவசாயிக்கு பிரதமர் மோடி பாராட்டு

மதுரை விவசாயிக்கு பிரதமர் மோடி பாராட்டு
X
வாழை நாரில் வீட்டு உபயோக பொருட்கள் தயாரித்து அசத்தும் மதுரை விவசாயி முருகேசனை “மன் கி பாத்” நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பாராட்டினார்.

மதுரை சோழவந்தான் அருகே உள்ளது மேலக்கால் கிராமம், இந்த கிராமத்தில் வசித்து வருபவர் விவசாயி முருகேசன். இவர் வாழை கழிவுகளிலிருந்து வீட்டு உபயோகப் பொருட்கள் தயாரித்து வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்து வருகிறார். அதாவது வாழை மரத்திலிருந்து வீணாகும் கழிவுகளை பார்த்த இவருக்கு அதிலிருந்து ஏதாவது உபயோகமான பொருட்களை தயாரிக்க வேண்டும் என்ற சிந்தனை வந்ததாக கூறுகிறார். வேளாண் துறை அதிகாரிகளை அணுகியபோது கரும்பு சக்கையில் இருந்து ஊட்டமளிக்கும் பொருட்கள் தயாரிக்கலாம் வைக்கோலில் இருந்து காளான் தயாரிக்கலாம் என்று வேளாண் அதிகாரிகள் கூறியபோது, வாழை நாரிலிருந்து நாமும் ஏதாவது தயாரித்தால் என்ன என்ற சிந்தனை உருவானது என்றும்,

இது விஷயமாக மதுரை சென்று பார்த்தபோது பிளாஸ்டிக் பொருள்களிலிருந்து கூடை பேக் மேட் நாற்காலி போன்ற பொருட்கள் தயாரிப்பது தெரியவந்தது. இதேபோல் வாழை நாரிலிருந்து நாமும் பொருட்கள் தயாரித்தால் என்ன என்ற யோசனை வந்ததாகவும், அதன்படி இதற்கான கருவிகளை சேகரிக்க தொடங்கியதாக கூறுகிறார்.

எங்கள் பகுதியில் தேங்காய் நார் பருத்தி போன்றவற்றில் கயிறு திரிக்க தொடங்கிய போது குட்டை குட்டையாக இருந்ததாகவும், ஆகையால் வாழை நார் நீளமாக இருப்பதால் கயிறு திரித்து கூடை பின்ன தொடங்கியதாக கூறுகிறார்.


மேலும் கயிறு மூலம் கூட பேக் தயாரிக்கும் மிஷினை உருவாக்க தமிழகத்தின் பல பகுதிகளுக்கும் சென்று திரும்பியதாகவும் பின்பு சைக்கிள் மூலம் அந்த எந்திரத்தை தானே தயாரித்ததாக கூறுகிறார். தான் தயாரித்த பொருட்களை விற்பதற்கு பல கம்பெனிகளுக்கு ஏறி இறங்கியதாகவும் பின்பு சென்னையில் உள்ள ஒரு தனியார் கம்பெனியில் விற்க முடிவு செய்தபோது, அந்த கம்பெனி மற்றவர்களிடம் பேசி வாங்கிக் கொள்வதாக கூறினார்கள் என்றும், அதன்படி தான் தயாரித்த பொருட்களை அந்த கம்பெனியில் கொடுத்து வந்ததாகவும், அதன் பின்பு அவர்கள் தொடர்பு கொண்டு உடனடியாக எங்களுக்கு 500 முதல் 1000 பொருட்கள் தேவைப்படுவதாக கூறினார்கள் என்று கூறுகிறார்.

இந்தப் பொருட்கள் மார்க்கெட் ஆன விஷயத்தை கூறும் போது, பிளாஸ்டிக் பொருட்களை உபயோகப்படுத்தி கொண்டிருந்த போது அது கீழே விழுந்து சேதாரமாகி விடுவதாகவும், வாழை நாரிலிருந்து தயாரிக்கும் பொருட்கள் இயற்கை முறையில் தயாரிப்பதால் சேதாரமில்லாமல் இருப்பதாகவும் அதிகமாக விற்கப் படுவதாகவும் கூறுகிறார்.

வாழை நாரில் கழிவுகளிலிருந்து மாதத்திற்கு 5000 ற்கும் மேற்பட்ட நாற்காலி, சேர், மேட் பேக் போன்ற பொருட்களுக்கு மேல் ஏற்றுமதி செய்யப்படுவதால் அதை உற்பத்தி செய்வதற்கான இடம் போதுமானதாகவும் அதற்கான பொருளாதார வசதியும் இல்லாமல் இருந்தது. அதற்காக தமிழ்நாடு கதர் கிராம தொழில் ஆணையத்திடம் அணுகி கடன் உதவி கேட்டபோது தர மறுத்தார்கள், மீண்டும் மீண்டும் அவர்களிடம் வலியுறுத்தி ரூபாய் 5 லட்சம் கடன் பெற்று சொந்தமாக இந்த தொழிலை தொடங்கியதாகவும் இதன்மூலம் முதலில் 50 பெண்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கி வந்த நான் இன்று சுமார் 500க்கும் மேற்பட்ட பெண்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கி வருவதாகவும் கூறுகிறார்.

மேலும் வேலைக்கு வரும் பெண்களுக்கு முழு பாதுகாப்பும் காப்பீடு வசதியும் செய்து கொடுத்திருப்பதாக கூறும் இவர், இதன் மூலம் இந்தப் பகுதி வாழை விவசாயிகள் அதிக வருமானம் பெறுவதாக கூறுகிறார் நாட்டின் ஏற்றுமதி மூலம் அன்னிய செலவாணி வருவதாகவும் ஜிஎஸ்டி வரி கூடுதலாக கிடைப்பதாகவும் கூறுகின்றனர். இவர் தற்போது பிரதமர் மோடி அவர்கள் பாராட்டியது எனக்கு மிகுந்த மகிழ்ச்சியை அளிப்பதாக கூறுகிறார்.

மேலும் அசாம் பாட்னா ஆந்திரா மத்தியப் பிரதேசம் போன்ற வெளிமாநில உற்பத்தியாளருக்கு பயிற்சி கொடுக்கும் நான் போதிய நிதி உதவி இருந்தால், எங்கள் பகுதியில் பெரிய உற்பத்தி நிறுவனத்தை தொடங்கி ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்களுக்கு வேலை கொடுக்கலாம் என்று இருப்பதாகவும் அதற்காக நிதி உதவி அளிக்க அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளதாகவும் கூறுகிறார்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!