தேர்தல் பாதுகாப்பு பணி: மத்திய பாதுகாப்பு படையினர் வருகை

தேர்தல் பாதுகாப்பு பணி: மத்திய  பாதுகாப்பு படையினர் வருகை
X
தேர்தல் பாதுகாப்பு பணிகளுக்காக மத்திய எல்லை பாதுகாப்பு படையினர் மதுரை வருகை

சட்டமன்ற தேர்தல் அறிவிப்பு வெளியானதையடுத்து தமிழகம் முழுவதிலும் தேர்தல் நடைமுறைகள் அமலுக்கு வர தொடங்கியது.

இந்நிலையில் சட்டமன்ற தேர்தல் பாதுகாப்பு பணிகளுக்காக மதுரை, தென்காசி, தூத்துக்குடி, நாகர்கோவில் ஆகிய மாவட்டங்களுக்கு செல்வதற்காக 9 கம்பெனிகளை சேர்ந்த 1130 மத்திய எல்லை பாதுகாப்பு படையினர் அசாமிலிருந்து ரயில் மூலம் மதுரை ரயில்வே நிலையத்திற்கு வருகை தந்தனர். இதனையடுத்து அவர்கள் குழு வாரியாக அந்தந்த மாவட்டங்களுக்கு பாதுகாப்பு படை வாகனங்கள் மூலமாக அனுப்பி வைக்கப்பட்டனர். முன்னதாக அசாமில் படை வீரர்களுக்கு கொரோனா பரிசோதனை மேற் கொள்ளப்பட்டுள்ளது. இந்த பாதுகாப்பு படையினர் உள்ளூர் காவலர்களோடு இணைந்து தேர்தல் வாக்குபதிவு நாள் வரை பாதுகாப்பு பணிகளில் ஈடுபடுவார்கள்.

Tags

Next Story
ai based agriculture in india