பாஜக., தேர்தல் பணிக்குழு ஆலோசனை கூட்டம்

பாஜக., தேர்தல் பணிக்குழு ஆலோசனை கூட்டம்
X

மதுரை மாவட்டம்,சோழவந்தானில் பாஜக சார்பில் தேர்தல் பணிக்குழு நியமன ஆலோசனை கூட்டம் நடந்தது.

மதுரை மாவட்டம்,சோழவந்தான் சட்டமன்றத் தொகுதியில் பாஜக., சார்பில் தேர்தல் பணிக்குழு நியமன ஆலோசனைக் கூட்டம் நடந்தது. இக்கூட்டத்திற்கு பாஜக,மாவட்டத் தலைவர் மகா சுசீந்திரன் தலைமை தாங்கினார். விவசாய அணி மாநில செயலாளர் முத்தையா முன்னிலை வகித்தார். தொகுதி ஒருங்கிணைப்பாளர் கோவிந்தமூர்த்தி வரவேற்றார். தொகுதி பொறுப்பாளர் ரஞ்சித்குமார், முன்னாள் மாவட்டத் தலைவர் சீதாராமன், ஒன்றிய தலைவர்கள் முருகேஸ்வரி, வாசுதேவன், ஜெயபாண்டி, தங்கத்துரை ஆகியோர் பேசினார்கள்.

தேர்தல் பணிக்குழுவில் தலைவர் முத்தையா, ஸ்ரீநிவாசன், மகா சுசீந்திரன், கோவிந்த மூர்த்தி, ரஞ்சித்குமார், சீதாராமன், சரிதா, நாகஜோதி உட்பட 15 பேர் மற்றும் மைய குழு,சமுதாய சந்திப்பு குழு, மகளிர் குழு, அரசு தொடர்புகள், சமூக ஊடக துறை விளம்பரம், பிரச்சார குழு, கலைக்குழு, நிதிக்குழு, பூத் கமிட்டி குழு, ஆகிய குழுக்கள் அமைக்கப்பட்டு 150 பேர் தேர்தல் பணி குழுவில் இடம்பெற்றுள்ளனர். கூட்டத்தில் நிர்வாகிகள் ஆண்டி, முத்துமணி, ராமதுரை, காத்தமுத்து, மாயாண்டி உட்பட ஏராளமானோர் பேசினார்கள்.

Tags

Next Story