இந்திய கம்யூனிஸ்ட் அரசியல் எழுச்சி மாநாடு

இந்திய கம்யூனிஸ்ட் அரசியல் எழுச்சி மாநாடு
X

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் அரசியல் எழுச்சி மாநாடு மதுரையில் இன்று துவங்கியது.

மதுரை சுற்றுச்சாலையில் வண்டியூா் பிரிவு அருகே நடைபெறும் இந்த மாநாட்டை, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி பொதுச் செயலா் ராஜா தொடங்கி வைக்கிறாா். திமுக தலைவா் ஸ்டாலின், மதிமுக பொதுச் செயலா் வைகோ, தி.க தலைவர் கி.வீரமணி, காங்கிரஸ் கட்சி மாநிலத் தலைவா் அழகிரி, மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலா் பாலகிருஷ்ணன், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவா் தொல்.திருமாவளவன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலா் முத்தரசன், மூத்த தலைவா்கள் நல்லகண்ணு, தா.பாண்டியன்,மகேந்திரன் மற்றும் திமுக கூட்டணி கட்சிகளின் தலைவா்கள் உள்ளிட்ட பலா் இந்த கூட்டத்தில் கலந்து கொள்கின்றனர்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!