ஆளும்கட்சி பயன்பெறவே கடன் தள்ளுபடி-முத்தரசன்

ஆளும்கட்சி பயன்பெறவே கடன் தள்ளுபடி-முத்தரசன்
X

ஆளும்கட்சியினர் பயன்பெறவே கடன் தள்ளுபடி அறிவித்துள்ளார் தமிழக முதல்வர் என மதுரையில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில தலைவர் முத்தரசன் தெரிவித்துள்ளார்.

மதுரையில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில தலைவர் முத்தரசன் செய்தியாளர்களை சந்தித்து பேசியபோது :ஆளும்கட்சியினர் பயன்பெறவே கடன் தள்ளுபடி அறிவித்துள்ளார் தமிழக முதல்வர். யார் யாருக்கு கடன் தள்ளுபடி செய்யப்பட்ட விவரங்களை வெளியிட வேண்டும்,சாத்தூர் அருகே நடைபெற்ற பட்டாசு ஆலை விபத்தில் 18பேர் உயிரிழந்தது வருத்தமளிக்கிறது. பாஜகவும், அதனுடன் கூட்டணி வைக்கும் கட்சிகளை தோற்கடிக்க வேண்டும் என்பது தான் எங்களின் கொள்கை, யார் குடும்பத்தினர் வேண்டுமானாலும் விருப்பபட்டால் அரசியலுக்கு வரலாம், நாங்கள் தான் ஸ்டாலினை முதல்வர் வேட்பாளராக அறிவித்துள்ளோம்.

நாங்கள் 3வது அணி அல்ல ஒரே அணிதான் திமுக அணி. யார் வந்தாலும் இணைக்கிறோம் , கூடுதல் இடங்கள் கேட்ககூடாது, முதியவர்கள் தபால் வாக்குகள் வேண்டி யாரிடமும் கோரிக்கை வைக்கவில்லை, தபால் வாக்குகளால் முறைகேடு ஏற்படும், முதியவர்கள் மீதான கருணையினால் இதனை நாங்கள் ஏற்கவில்லை, சசிகலா தன்னை முதலில் நிலை நிறுத்தி கொள்ளட்டும், நிர்கதியாய் நிற்கிறார் என்றார்.

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!