மதுரை அரசு மருத்துவமனை புதிய கட்டடத்திற்கு அடிக்கல்
மதுரை அரசு இராஜாஜி மருத்துவமனையில் ஆறு தளங்கள் கொண்ட புதிய கட்டடத்திற்கு முதல்வர் அடிக்கல் நாட்டினார்.
மதுரை அரசு இராஜாஜி மருத்துவமனை வளாகத்தில் தமிழக அரசின் சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை சார்பில் ரூ. 121.80 கோடி மதிப்பில் 22,580 ச.மீ பரப்பளவில் ஆறு தளங்கள் கொண்ட புதிய அடுக்குமாடி கட்டடம் கட்டுவதற்காக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி சென்னையிலிருந்து அடிக்கல் நாட்டினார்.
மதுரையில் நடைபெற்ற கால்கோள் விழாவில் அமைச்சர்கள் செல்லூர் கே.ராஜு, ஆர்.பி.உதயகுமார், ஆட்சியர் அன்பழகன் ஆகியோர் பங்கேற்றனர். இந்த ஆறு தளங்கள் கொண்ட புதிய அடுக்குமாடி கட்டடத்தில் இருதய அவசர நிலைத்துறை, 22 அறுவை சிகிச்சை அரங்குகள், மருத்துவ சேவை பிரிவுகள், கேத் ஆய்வகம், இமேஜிங் மையம் உள்ளிட்ட அதி நவீன சிகிச்சை பிரிவுகள் அமைய உள்ளன.
Tags
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu