வேளாண் சட்டத்தை ராகுல் படிக்கவில்லை -எல்.முருகன்

வேளாண் சட்டத்தை ராகுல் படிக்கவில்லை -எல்.முருகன்
X

ராகுல்காந்தி வேளாண் சட்டம் குறித்து முழுமையாக படிக்காததே அவர் விமர்சிப்பதற்கு காரணம் என்று பாஜக தமிழக தலைவர் எல்.முருகன் கூறினார்.

தமிழக பாஜக மாநில தலைவர் வேல்முருகன் மதுரையில் செய்தியாளர்களிடம் கூறியதாவது,பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா தமிழகம் வருவது, தமிழகத்தில் உள்ள பாஜக நிர்வாகிகளுக்கு புதிய உத்வேகம் அளிக்கும்.அவரை வரவேற்க மதுரையில் சிறப்பான ஏற்பாடுகளை செய்து வருகிறோம். கட்சியின் கூட்டத்தில் பங்கேற்க அவர் வருகிறார். வேறு எந்த அரசியல் காரணமும் கிடையாது.ராகுல் காந்தி வேளாண் சட்டம் குறித்து முழுமையாக படிக்காததே அவர் விமர்சிப்பதற்கு காரணம் என்றார்.

இதை தொடர்ந்து பேட்டியளித்த பாஜக தேசிய பொதுச்செயலாளர் சிடி.ரவி கூறும் போது, வரலாற்றில் முக்கிய இடமான மதுரையில் தேர்தல் பிரச்சாரத்தை ஜே.பி.நட்டா துவங்குகிறார். கடந்த 2011 சட்டமன்ற தேர்தலில் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா இதே இடத்தில் தான் பிரச்சாரம் செய்தார். பாஜக தமிழ்மொழி மற்றும் கலாச்சாரத்தை எப்போதும் காக்கும் என்று பேசினார்.

Tags

Next Story
ரயில் முன்பதிவில் மோசடி: பாதுகாப்பு படையினர் தீவிர விசாரணை!