பிரசித்தி பெற்ற பாலமேடு ஜல்லிக்கட்டு தொடங்கியது

பிரசித்தி பெற்ற பாலமேடு ஜல்லிக்கட்டு தொடங்கியது
X

மதுரை பாலமேட்டில் இன்று ஜல்லிக்கட்டு போட்டி தொடங்கியது. போட்டியானது காலை 8 மணிக்கு தொடங்கி மாலை 4 மணிவரை நடைபெறுகிறது.

பொங்கல் பண்டிகையின் இரண்டாவது நாளான இன்று மாட்டுப் பொங்கல் கொண்டாடப்படுகிறது. இந்நிலையில் மதுரை மாவட்டம் பாலமேட்டில் ஜல்லிக்கட்டு போட்டி தொடங்கியது. போட்டியை முன்னிட்டு மாடுபிடி வீரர்கள் உறுதிமொழி ஏற்றதைத்தொடர்ந்து பாரம்பரியமிக்க பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டி தொடங்கியது. முதலில் பாலமேடு கிராம மகாலிங்க சாமி கோவில் காளைகள் உள்ளிட்ட கோவில் காளைகள் அவிழ்த்து விடப்பட்டு, ஜல்லிக்கட்டு போட்டி தொடங்கி வைக்கப்பட்டது. போட்டியை வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டியில் 783 காளைகள், 651 மாடுபிடி வீரர்களுக்கு அனுமதிச்சீட்டு வழங்கப்பட்டு களத்தில் உள்ளனர். ஜல்லிக்கட்டில் வெற்றி பெறும் வீரருக்கு காரும், காளைகளுக்கு காங்கேயம் பசுமாடும் பரிசாக வழங்கப்படும் என விழா கமிட்டி அறிவித்துள்ளது.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!