ரஜினிகாந்த் நலம் பெற அக்கினிச்சட்டி எடுத்த ரசிகர்கள்

ரஜினிகாந்த் நலம் பெற அக்கினிச்சட்டி எடுத்த ரசிகர்கள்
X

ரஜினிகாந்த் பூரண உடல்நலம் பெற வேண்டி மதுரை திருப்பரங்குன்றத்தில் அவரது ரசிகர்கள் அக்கினிச் சட்டி எடுத்து வழிபட்டனர்.

அண்ணாத்த படப்பிடிப்புக்காக ரஜினிகாந்த் ஐதராபாத் சென்றிருந்தார் . விரைவில் இப்படத்தை முடிக்க அதிகநேரம் எடுத்து படப்பிடிப்பில் நடித்து வந்தார். கொரோனா தடுப்பு உள்ளிட்ட தகுந்த பாதுகாப்பு நடவடிக்கைகளுடன் படப்பிடிப்பு நடந்து வந்தபோதும், படப்பிடிப்பு தளத்தில் நால்வருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது. ரஜினிக்கு கொரோனா பாதிப்பு இல்லை என்றாலும் அவரது ரத்த அழுத்தத்தில் நிறைய மாறுபாடு இருந்தது.

இதனால் ஐதராபாத்தில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் ரஜினிகாந்த் அனுமதிக்கப்பட்டார். பின்னர் அவர் குணமடைந்து வீடு திரும்பினார். ஆனால் திடீரென தான் அரசியலில் இருந்து விலகுவதாக அறிவித்தார். இந்நிலையில் ரஜினிகாந்த் பூரண உடல்நலம் பெற வேண்டி அவரது ரசிகர்கள் அக்கினிச் சட்டி எடுத்து பறவைக்காவடியோடு திருப்பரங்குன்றத்தில் சாமி தரிசனம் செய்தனர்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!