தம்பியின் திறமை அண்ணனுக்கு தான் தெரியும் செல்லூர் ராஜூ

தம்பியின் திறமை அண்ணனுக்கு தான் தெரியும்   செல்லூர் ராஜூ
X

தம்பியின் திறமை அண்ணனுக்கு தானே தெரியும் ஸ்டாலின் முதல்-அமைச்சராக வர முடியாது என்ற அவருடைய அண்ணன் அழகிரியே சொல்லி விட்டார் என கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜூ மதுரையில் பேட்டியின் போது கூறினார்.

மதுரையில் பள்ளி மாணவர்களுக்கு இலவச மிதிவண்டிகளை வழங்கி விட்டு செய்தியாளர்களை சந்தித்த கூட்டுறவு துறை அமைச்சர் செல்லூர்ராஜூ கூறுகையில், சென்னை வரும் அமைச்சர் அமித்ஷா கூட்டணி பற்றி பேசுவாரா என்பது எனக்கு தெரியவில்லை அதை அவரிடம் தான் கேட்டு தெரிந்து கொள்ள வேண்டும்.கமல்ஹாசன் தேர்தல் வரை பேசிக் கொண்டிருப்பார். இதுவும் ஒரு படப்பிடிப்பு என நினைத்துக் கொண்டிருக்கிறார்.

உலகமே போற்றும் ஒரு நடிகராக அவர் நமக்குத் தேவை. எதிர்கட்சித் தலைவர் ஸ்டாலின் எதையுமே நன்மையாக சொன்னது கிடையாது. நீங்களும் நானும் வெளியில் இருந்து தான் எதிர்கட்சி தலைவர் ஸ்டாலினை பார்த்து வருகிறோம். ஆனால் அழகிரி கூடவே பிறந்து வளர்ந்தவர். தன் தம்பிக்கு என்ன திறமை உள்ளது என்பது அண்ணனுக்கு தான் தெரியும் என தெரிவித்தார்.

Tags

Next Story
how to bring ai in agriculture