ஊழல் குறித்து பேசினால் மக்கள் சிரிக்கிறார்கள் :கமல்ஹாசன்

ஊழல் குறித்து பேசினால் மக்கள் சிரிக்கிறார்கள் :கமல்ஹாசன்
X

ஊழல் குறித்துப் பேசும் போது, மக்கள் தங்களுக்குத் தெரிந்த விஷயமாக கருதி குலுங்கி, குலுங்கி சிரிக்கிறார்கள் என மதுரையில் கமல்ஹாசன் பேட்டியின் போது கூறினார்.

சென்னை செல்வதற்காக மதுரை விமானநிலையம் வந்த மக்கள் நீதி மையம் கட்சி தலைவர் கமல்ஹாசன் செய்தியாளர்களை சந்தித்து கூறுகையில், நான் ஏற்கனவே ஆட்சியாளர்களின் லஞ்சப்பட்டியல்களை கூட்டங்களில் வெளியிட்டு உள்ளேன். இனி ஊழல் பட்டியல் தயார் செய்ய நிறைய வேலை இருக்கிறது. திமுக, அதிமுக ஆகிய இரு கட்சிகள் ஊழல் குறித்து பட்டியல் தயார் செய்ய நிறைய நேரம் தேவைப்படுமே என்று யோசித்த நேரத்தில், திமுக ஊழல் குறித்து அதிமுக முதல்வர் பட்டியலிட்டு எனக்குப் பாதி வேலையைக் குறைத்து விட்டார்.

தேர்தல் பரப்புரையில் மக்கள் நலத் திட்டங்கள் குறித்துப் பேசுவது முக்கியம். மற்றவர்களை வைதல் என்பது வேறு. மக்கள் நலத் திட்டங்களைக் குறித்துப் பேசுவதற்கு இடையில், சுவாரஸ்யத்திற்காக ஊழல் குறித்துப் பேசும் போது, மக்கள் தங்களுக்குத் தெரிந்த விஷயமாக கருதி குலுங்கி குலுங்கி சிரிக்கிறார்கள். பண பலம், அதிகார பலம் தாண்டி நாங்கள் மக்கள் பலத்தையே நம்பி இருக்கிறோம், என்றார்.

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!