மீன் கருவாடாகலாம்,கருவாடு மீனாக முடியாது : தேதிமுக குறித்து அதிமுக எம்எல்ஏ.,கருத்து

மீன் கருவாடாகலாம்,கருவாடு மீனாக முடியாது :  தேதிமுக குறித்து அதிமுக எம்எல்ஏ.,கருத்து
X

குளத்தில் இருந்து மீன் வெளியே சென்றால் கருவாடாக மாறும். மீண்டும் மீனாக மாறாது என தேமுதிக குறித்து அதிமுக எம்எல்ஏ., கூறினார்.

மதுரை வண்டியூர் சௌராஷ்டிரபுரத்தில் அமைக்கப்பட்ட முதலமைச்சதின் அம்மா மினி கிளினிக்கை மதுரை வடக்கு தொகுதி எம்எல்ஏ., வி.வி.ராஜன் செல்லப்பா தொடங்கி வைத்தார், பின்னர் செய்தியாளர்களை சந்தித்து வி.வி.ராஜன் செல்லப்பா கூறுகையில் "முதலமைச்சரின் அம்மா மினி கிளினிக் திட்டத்திற்கு மக்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பு, இந்திய துணை கண்டத்தில் அம்மா மினி கிளினிக் சிறப்பான திட்டம், கொரோனா தொற்றை கட்டுப்படுத்துவதில் தமிழகம் முதலிடத்தில் உள்ளது, அதிமுகவுக்கு 2021 சட்டமன்ற தேர்தலில் மக்கள் சிறப்பான ஆதரவை தருவார்கள், 2021 ல் அதிமுக மிகப்பெரிய வெற்றி பெறும், எடப்பாடி கே.பழனிச்சாமி மீண்டும் முதல்வர் ஆவார் என்றார்.

கமல்ஹாசனின் தகுதி என்ன என்பது கடந்த தேர்தலில் தெரிந்து விட்டது, இந்த தேர்தலில் கமலின் வாக்கு சதவீதம் குறையும். தேமுதிக அதிமுக கூட்டணியில் இருந்தால் அவர்களுக்கு தான் நல்லது, குளத்தில் இருந்து மீன் வெளியே சென்றால் கருவாடாக மாறும். மீண்டும் மீனாக மாறாது, அதிமுக மக்களை நம்பி 234 தொகுதிகளையும் போட்டியிட்டது என்பதை ஞாபகம் வைத்து கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் என கூறினார்

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!