கமல்ஹாசன் பேசுவது அவருக்கும் புரியவில்லை மக்களுக்கும் புரிய வில்லை : அமைச்சர் செல்லூர் ராஜு

கமல்ஹாசன் பேசுவது அவருக்கும் புரியவில்லை மக்களுக்கும் புரிய வில்லை : அமைச்சர் செல்லூர் ராஜு
X

கமல்ஹாசனை கட்சித் தலைவராக மக்கள் இன்னும் ஏற்றுக்கொள்ளவில்லை, அவர் பேசுவது அவருக்கும் புரியவில்லை மக்களுக்கும் புரிய வில்லை என மதுரையில் கூட்டுறவு துறை அமைச்சர் செல்லூர் ராஜு பேட்டியின் போது கூறினார்.

மதுரை துவரிமான் கிராமத்தில் பொது சுகாதாரத்துறை சார்பாக அம்மா மினி கிளினிக் சேவையை தமிழக கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜூ திறந்து வைத்தார்,அதனைத் தொடர்ந்து அவர் பேசும் போது கூறியதாவது, நல்லவர்கள் ஆட்சி செய்தால் மழை மும்மாரி பெய்யும் என கூறுவார்கள், அதற்கு சான்றாக மழை பெய்து வருகிறது,திராவிட இயக்கம் வந்த பின் பெண்களின் உரிமை பாதுகாக்கபட்டுள்ளது. பெண்கள் எல்லா நிலையில் உயர வேண்டும் என நினைத்தவர் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா. 20ஆண்டுகள் திமுக ஆட்சியில் பெண்களுக்கு எந்த திட்டங்களையும் செய்யவில்லை.விவசாயிகளுக்கு துணை நிற்போம் என கூறும் எதிர் கட்சி தலைவருக்கு தன்னுடைய தலையில் முடியை மட்டும் தான் நட தெரியும், வயலில் பயிரை நட தெரியாது.

கமல்ஹாசனை கட்சித் தலைவராக மக்கள் இன்னும் ஏற்றுக்கொள்ளவில்லை, அவர் பேசுவது அவருக்கும் புரியவில்லை மக்களுக்கும் புரிய வில்லை.எம்ஜிஆர் எம்ஜிஆர் என கூறும் கமல் அதிமுகவில் வந்து சேர்ந்திருக்க வேண்டும், எம்ஜிஆர் மடியில் அமர்ந்தேன் என எல்லோரும் சொல்கிறார்கள்.எம்ஜிஆர் துவங்கிய கட்சி அதிமுக. அது இந்த கட்சி மட்டுமே என்று பேசினார்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!