மதுரை - ராமேஸ்வரம் பாசஞ்சர் ரயில் இன்று முதல் மீண்டும் இயக்கம்

மதுரை - ராமேஸ்வரம் பாசஞ்சர் ரயில் இன்று முதல் மீண்டும் இயக்கம்
X
கொரோனா தொற்று பரவலால் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மதுரை-ராமேஸ்வரம் பயணிகள் ரயில் சேவை, இன்று முதல் மீண்டும் தொடங்கப்பட்டுள்ளது.

கொரோனா தொற்று தீவிரமாக பரவியபோது, நாட்டில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போது, பயணிகள் ரயில் சேவை நிறுத்தப்பட்டது. தொற்று பரவல் குறைந்ததை அடுத்து, மீண்டும் ரயில் சேவைகள் படிப்படியாக தொடங்கப்பட்டன.

எனினும், பாசஞ்சர் ரயில் சேவை உள்ளிட்டவை, முழுமையாக தொடங்கப்படாமல் இருந்து வந்தது. அவற்றையும் மீண்டும் இயக்க வேண்டும் என, ரயில் பயணிகள் கோரிக்கை விடுத்தனர். இதனை ஏற்று, மதுரை-ராமேஸ்வரம் காலை நேர பயணிகள், ராமேஸ்வரம்-மதுரை மாலை நேர பயணிகள் (பாசஞ்சர்) ரயில்களை இன்று முதல் மீண்டும் இயக்குவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

ராமேஸ்வரம், பாம்பன், மண்டபம், மண்டபம் முகாம், உச்சிபுளி, வாலாந்தரவை, ராமநாதபுரம், சத்திரக்குடி, பரமக்குடி, சூடியூர், மானாமதுரை, ராஜகம்பீரம், திருப்பாசேத்தி, திருப்புவனம், சிலைமான், மதுரை கிழக்கு ஆகிய ரயில் நிலையங்களில், பாசஞ்சர் ரயில் நின்று செல்லும் என ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.

Tags

Next Story
பவானிசாகர் தொகுதியில் புதிய குடிநீர் திட்டங்கள்: 1 கோடி வளர்ச்சி பணிகள் ஆரம்பம்