தமிழகத்தில் மது விற்பனைக்கு தடை விதிக்க நேரிடும்: நீதிமன்றம் எச்சரிக்கை

தமிழகத்தில் மது விற்பனைக்கு தடை விதிக்க நேரிடும்: நீதிமன்றம் எச்சரிக்கை
X
பள்ளி மாணவர்கள் மது அருந்தும் பிரச்சனைக்கு தீர்வு காணாவிட்டால் மது விற்பனைக்கு தடை விதிக்க நேரிடும் என உயர்நீதிமன்ற மதுரை கிளை எச்சரிகை

டாஸ்மாக் விற்பனை நேரத்தை மதியம் 2 மணி முதல் இரவு 8 மணி வரை என மாற்றியமைக்க கோரிய வழக்கு உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.

வழக்கை விசாரித்த நீதிபதிகள் சீருடையுடன் பள்ளி மாணவர்கள் மது அருந்தும் புகைப்படங்கள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.பள்ளி மாணவர்கள் மது அருந்தும் பிரச்சனைக்கு தீர்வு காணப்பட வேண்டும்.

இந்த பிரச்சனைக்கு தீர்வு காணப்படாவிட்டால் தமிழகத்தில் மது விற்பனைக்கு தடை விதிக்க நேரிடும் என எச்சரித்த நீதிபதிகள் டாஸ்மாக் விற்பனை நேரத்தை மாற்றியமைக்க கோரிய வழக்கை 2 வாரத்துக்கு ஒத்திவைத்தனர்.

Tags

Next Story
future of ai video