/* */

கனல் கண்ணன் ஜாமீன் மனு தள்ளிவைப்பு

சினிமா சண்டை பயிற்சியாளர் கனல் கண்ணன் ஜாமீன் மனுவை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளி வைத்துள்ளது.

HIGHLIGHTS

கனல் கண்ணன் ஜாமீன் மனு தள்ளிவைப்பு
X

சென்னை மதுரவாயலில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் பேசிய சினிமா சண்டை பயிற்சியாளர் கனல் கண்ணன், ஸ்ரீரங்கம் கோவில் முன்பு உள்ள பெரியார் சிலையை அப்புறப்படுத்த வேண்டும் என்று கூறினார். அதுகுறித்து சென்னை மத்திய குற்றப்பிரிவு காவல்துறை வழக்குப் பதிவு செய்து கனல் கண்ணனை கைது செய்தனர்.

இந்த வழக்கில் ஜாமீன் கேட்டு அவர் தாக்கல் செய்த மனுவை எழும்பூர் நீதிமன்றமும், சென்னை முதன்மை செசன்சு நீதிமன்றமும் அடுத்தடுத்து தள்ளுபடி செய்தன.

அதையடுத்து சென்னை உயர்நீதிமன்றத்தில் கனல் கண்ணன் தரப்பில் ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அந்த மனு நீதிபதி ஜி.கே.இளந்திரையன் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, கனல் கண்ணன் ஜாமீன் மனு தொடர்பாக பதிலளிக்க காவல்துறைக்கு உத்தரவிட்ட நீதிபதி, கனல் கண்ணன் ஜாமீன் மனு மீதான விசாரணையை செப்டம்பர் 1-ம் தேதிக்கு தள்ளிவைத்தார்.

Updated On: 29 Aug 2022 8:36 AM GMT

Related News

Latest News

  1. ஆன்மீகம்
    விண்ணின் தேவன் மண்ணில் பிறந்த நாள்..! கிறிஸ்துமஸ் வாழ்த்துகள்..!
  2. லைஃப்ஸ்டைல்
    பொங்கலோ..பொங்கல்..! இனிக்கும் பொங்கல் வாழ்த்து..!
  3. வீடியோ
    🔴LIVE: Saattai அலுவலக திறப்பு விழாவில் சீமான் செய்தியாளர்கள்...
  4. வீடியோ
    🔴LIVE: Saattai அலுவலக திறப்பு விழாவில் சீமான் செய்தியாளர்கள்...
  5. லைஃப்ஸ்டைல்
    நீங்கள் பிறந்ததே ஒரு சிறப்புதான்..! சிறப்பான வாழ்த்து..!
  6. கும்மிடிப்பூண்டி
    குப்பை கழிவுகள் சேகரிக்கும் தொழிற்சாலையில் திடீர் தீ விபத்து..!
  7. ஈரோடு
    சத்தியமங்கலம் அருகே யானை தந்தங்கள் திருடப்பட்ட வழக்கில் ஒருவர்
  8. லைஃப்ஸ்டைல்
    முகப்பொலிவின் மந்திரம் - சாலிசிலிக் ஆசிட்!
  9. லைஃப்ஸ்டைல்
    போலரைஸ்டு சன்கிளாஸ்ல அப்படி என்னதான் ஸ்பெஷல்?
  10. திருப்பூர்
    திருப்பூா் தொகுதி தோ்தல் வாக்கு எண்ணும் பணி; 1,274 முகவா்கள் நியமனம்