தீர்ப்பு வருவதற்குள் ஓபிஎஸ் ஏன் அதிமுக அலுவலகம் சென்றார்? : நீதிபதி காட்டம்
அதிமுக அலுவலகத்தை சீல் வைத்தது தொடர்பான வழக்கில், ஓபிஎஸ் தரப்பு வழக்கறிஞரிடம் நீதிபதிகள் சரமாரி கேள்வி எழுப்பியுள்ளனர்.
விசாரணையின்போது நீதிபதிகள் கேட்டதாவது: அ.தி.மு.க அலுவலகத்தை மீண்டும் திறப்பது தொடர்பான வழக்கு விசாரணையில் இருக்கும் போது நீங்கள் ஏன் அங்கு சென்றீர்கள்? நடந்த சம்பவங்களைப் பற்றி உங்களுக்கு எதுவும் தெரியாது என்பதல்ல. காலை 9 மணிக்கு தனி நீதிபதி உத்தரவு பிறப்பிக்க வேண்டிய நிலையில், அங்கு செல்ல வேண்டிய அவசியம் என்ன?
நீங்கள் கட்சி அலுவலகத்திற்குள் நுழைய தடை இல்லை, ஆனால் ஒரு பொறுப்பான நபராக நீதிமன்றம் உத்தரவு பிறப்பிக்க இருக்கும் அந்த நேரத்தில் நீங்கள் கட்சி அலுவலகத்திற்கு வருவதைத் தவிர்த்திருக்க வேண்டாமா? என கேள்வி எழுப்பினர்
காவல்துறை நடவடிக்கை குறித்து நாளை அறிக்கை தாக்கல் செய்யுமாறு அரசுக்கு உத்தரவிட்ட நீதிபதி, அரசு தரப்பு வழக்கறிஞரிடம் "CCTV ஐப் பயன்படுத்துங்கள், கடுமையான நடவடிக்கை எடுங்கள். அவர்களால் மக்கள் மத்தியில் பீதியை உருவாக்க கூடாது. அவர்கள் சண்டையிட விரும்பினால், ஒரு கால்பந்து மைதானத்தை வாடகைக்கு எடுத்து அங்கு சண்டையிடட்டும். அதை தெருக்களில் செய்ய முடியாது என கூறினர்
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu