/* */

பத்திரப்பதிவுத் துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு

தமிழக பத்திரப்பதிவுத் துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளது.

HIGHLIGHTS

பத்திரப்பதிவுத் துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு
X

சென்னை உயர் நீதிமன்றம். (கோப்பு படம்).

கோவையில் உள்ள ஒரு தனியார் வங்கியில் வீட்டு கடன் வாங்கிய ஒருவர், தவணைச் தொகையை முறையாக செலுத்தாமல் இருந்துள்ளார். இதையெடுத்து, அவர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுத்த வங்கி நிர்வாகம், கடன் வாங்கிய வீட்டை கையகப்படுத்தியது. பின்னர், அந்த வீட்டை பொது ஏலம்விட்டது.

இதில் ஏலம் எடுத்தவர் பெயருக்கு, வீட்டை பத்திரப்பதிவு செய்யக்கோரி பொள்ளாச்சி சார் பதிவாளரிடம் விண்ணப்பித்தபோது. அதை அவர் நிராகரித்தார். இந்த சொத்தை கடந்த 2021 ஆம் ஆண்டு டிசம்பர் 18 ஆம் தேதி ஜிஎஸ்டி கவுன்சில் முடக்கம் செய்துள்ளது என்றும் அதனால், பத்திரப்பதிவு செய்ய முடியாது என்றும் தெரிவிக்கப்பட்டது.

அந்த உத்தரவை ரத்து செய்யக்கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் தனியார் வங்கி நிர்வாகம் வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கு விசாரணை நீதிபதி சதீஷ்குமார் முன்னிலையில் இன்று நடைபெற்றது. அப்போது, பத்திரப்பதிவு துறை சார்பில் ஆஜரான வழக்கறிஞர், ஒரு சொத்து முடக்கப்பட்டு இருந்தால், அந்த சொத்தை தமிழ்நாடு பத்திரப்பதிவு விதி 55ஏ-இன் கீழ் பத்திரப் பதிவு செய்ய முடியாது என்று வாதிட்டார்.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்த வங்கித் தரப்பு வழக்கறிஞர், ராதாகிருஷ்ணன், "ஜி. எஸ்.டி. சட்டத்தின்படி, பிரிவு 83-இன் கீழ் ஒரு சொத்து முடக்கம் செய்யப்பட்டால், அந்த முடக்க உத்தரவு ஒரு ஆண்டுக்கு மட்டுமே அமலில் இருக்கும். அதன்பின்னர், அந்த உத்தரவு தானாகவே காலாவதியாகிவிடும். 2021 ஆம் ஆண்டு டிசம்பர் 18 ஆம் தேதி ஜி.எஸ்.டி. கவுன்சில் இந்த சொத்தை முடக்கம் செய்து உள்ளது. இது கடந்த ஆண்டு டிசம்பர் மாதத்துடன் காலாவதியாகி விட்டது” என்று வாதிட்டார்.

இருதரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதி சதீஷ்குமார் பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது:

இதுபோன்ற ஏராளமான வழக்குகள் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்படுகிறது. தமிழ்நாடு பத்திரப்பதிவு விதி 55ஏ-வை நேரடியாக எதிர்த்து இந்த வழக்கு தொடரப்படவில்லை. இருந்தாலும், லட்சுமி தேவி வழக்கில் உச்ச நீதிமன்றம் பிறப்பித்த தீர்ப்பின்படி, கடந்த ஆண்டு செப்டம்பர் 5 ஆம் தேதி அமலுக்கு வந்த விதி 55-ஏ செல்லுபடியாகுமா? என்பதை பரிசோதிக்க வேண்டியது உள்ளது.

இந்த விதி, உச்ச நீதிமன்றம் மற்றும் இந்த நீதிமன்றத்தின் பல்வேறு தீர்ப்புகளுக்கு எதிராக உள்ளது. சொத்து மாற்றம் சட்டப்பிரிவுகளுக்கு எதிராகவும் உள்ளது. எனவே, இந்த சட்டப்பிரிவு சட்டப்படி செல்லுபடி ஆகாது. இந்த சட்டப்பிரிவின் கீழ் சொத்தை பத்திரப்பதிவு செய்ய முடியாது என்று சார் பதிவாளர் கூற முடியாது.

மேலும், ஜிஎஸ்டி. சட்டப்படி ஒரு ஆண்டுக்கு மட்டுமே சொத்தை முடக்க முடியும். அதன்படி, முடக்க உத்தரவும் காலாவதி ஆகிவிட்டது. பத்திரப்பதிவு செய்ய முடியாது என்று சார் பதிவாளர் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்கிறேன். 15 நாட்களுக்குள் பத்திரப்பதிவு செய்து கொடுக்க சார் பதிவாளருக்கு உத்தரவிடுகிறேன் என்று நீதிபதி சதீஷ்குமார் தனது உத்தரவில் தெரிவித்து உள்ளார்.

Updated On: 17 Feb 2023 5:08 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    பெண்மை சக்தியைப் போற்றும் உலக மகளிர் தின வாழ்த்துக்கள்
  2. லைஃப்ஸ்டைல்
    பெண்மையை போற்றுவோம்..! வல்லமை வளரும்..!
  3. ஆன்மீகம்
    விநாயகனே... வினை தீர்ப்பவனே! - இனிய விநாயகர் சதுர்த்தி வாழ்த்துகளை...
  4. சினிமா
    Indian 2 டிரைலர் எப்ப ரிலீஸ் தெரியுமா?
  5. சிங்காநல்லூர்
    போலி ஆவணங்கள் மூலம் நிலத்தை அடமானம் வைத்து மோசடி செய்ததாக புகார்
  6. லைஃப்ஸ்டைல்
    பிறப்பை கொண்டாடுவோம் வாங்க..! பிறந்தநாள் வாழ்த்து சொல்வோமா..?
  7. வீடியோ
    🔴LIVE : சத்யராஜ் மீண்டும் சர்ச்சை பேச்சு | WEAPON Movie Press Meet...
  8. கோவை மாநகர்
    கோவை ஆட்சியர் அலுவலகத்தில் மேற்கூரை சரிந்து விபத்து ; டூவிலர்கள்
  9. கோவை மாநகர்
    இந்து மதம், இந்தி மொழி, இந்தி பேசும் மக்களுக்கு எதிரான கட்சி திமுக :...
  10. ஈரோடு
    பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து 1,192 கன அடியாக அதிகரிப்பு