மருத்துவ படிப்பில் அரசு பள்ளி மாணவர்களுக்கான 7.5% இடஒதுக்கீடு செல்லும்

மருத்துவ படிப்பில் அரசு பள்ளி மாணவர்களுக்கான 7.5% இடஒதுக்கீடு செல்லும்
X

சென்னை உயர்நீதி மன்றம்.

மருத்துவ படிப்பில் அரசு பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்படும் 7.5 சதவீத இடஒதுக்கீடு சட்டம் செல்லும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது

மருத்துவ படிப்புகளில் அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீத இடஒதுக்கீடு வழங்கி கடந்த அ.தி.மு.க., ஆட்சிக் காலத்தில் சட்டம் இயற்றப்பட்டது. இந்த சட்டத்தை எதிர்த்தும், தங்களுக்கும் இடஒதுக்கீடு வழங்கக்கோரியும் தனியார் மற்றும் அரசு உதவி பெறும் மாணவர்கள் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குகள் தொடரப்பட்டன.

இந்த வழக்குகளை தலைமை நீதிபதி முனீஸ்வர்நாத் பண்டாரி தலைமையிலான அமர்வு விசாரித்து வந்தது. இதில் அனைத்து தரப்பு வாதங்களும் முடிவடைந்துள்ள நிலையில், இந்த வழக்கில் இன்று தீர்ப்பளிக்கப்பட்டது.

தீர்ப்பில், மருத்துவ படிப்பில் 7.5 சதவீதம் இடஒதுக்கீடு வழங்கும் சட்டம் செல்லும் என உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும் நீதிபதிகள், ‛இடஒதுக்கீடு வழங்க அரசுக்கு அதிகாரம் இருக்கிறது. அரசியலமைப்பு சட்டத்தின்படி இச்சட்டம் செல்லத்தக்கது. இந்த 7.5 சதவீத இடஒதுக்கீடின்படி மாணவர் சேர்க்கையை தொடரலாம். அரசு பள்ளி மாணவர்களுக்கான 7.5 சதவீத இடஓதுக்கீட்டை 5 ஆண்டுகளுக்கு பிறகு மறு ஆய்வு செய்ய வேண்டும் என உத்தரவிட்டனர்.

Tags

Next Story