லூலூ ஹைபர் மார்க்கெட்டும் தமிழ்நாட்டு இளைஞர்களின் வேலைவாய்ப்பும்

லூலூ ஹைபர் மார்க்கெட்டும் தமிழ்நாட்டு இளைஞர்களின் வேலைவாய்ப்பும்
X

தமிழக அரசு மற்றும் லூலூ நிறுவனம் ஆகியவற்றுக்கு இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது

லூலூ ஹைபர் மார்கெட் வந்தால் தமிழக இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு எப்படி? யார் யார் பாதிக்கப்படுவார்கள்?

சர்வதேச நிறுவனங்கள் இந்தியாவில் தொழில் தொடங்கினால், அதன்மூலம் வேலைவாய்ப்புகள் அதிகரித்து, மக்களின் வாழ்க்கை தரம் உயரும். அந்த வகையில் முதல்வர் ஸ்டாலினின் துபாய் பயணத்தில் சுமார் 6100 கோடி ரூபாய் முதலீடு திரட்டப்பட்டதாக தமிழக அரசு தெரிவித்தது. அவற்றில் கேரளாவைச் சேர்ந்த தொழிலதிபர் யூசப் அலியின் லூலூ குரூப் இண்டர்நேஷ்னல் நிறுவனம் சுமார் 3500 கோடி ரூபாய் முதலீடு செய்யவுள்ளது.

புரிந்துணர்வு ஒப்பந்தத்தின்படி, முதல் ஷாப்பிங் மால் 2024-ல் சென்னையில் தொடங்கும், அதே நேரத்தில் முதல் ஹைப்பர் மார்க்கெட் இந்த ஆண்டு இறுதியில் கோயம்புத்தூரில் உள்ள லக்ஷ்மி மில்ஸ் வளாகத்தில் திறக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஆனால், இந்த நிறுவனம் தமிழகத்திற்கு வருவதால், தமிழக இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு எந்த அளவு இருக்கும் என்பது குறித்த சந்தேகங்கள் நிலவுகின்றன

அனைத்து பொருள்களும் ஒரே இடத்தில் கிடைப்பது சூப்பர் மார்கெட் என்றால் அதைவிட பெரிதாக, அனைத்து தரத்திலான பொருள்களும் கிடைக்கும் இடம் ஹைபர் மார்க்கெட். 1995ஆம் ஆண்டு அபுதாபியில் லூலூ சூப்பர் மார்கெட்டை தொடங்கிய யூசுப் அலி, 2000ஆவது ஆண்டில் முதல் ஹைபர் மார்கெட்டை துபாயில் தொடங்கினார். 22 நாடுகளில் சுமார் 230 லூலூ ஹைபர் மார்கெட்டுகள் உள்ளன. உலகம் முழுவதும் 50,000க்கும் அதிகமான ஊழியர்கள் பணிபுரிகின்றனர். நிறுவனத்தின் மொத்த மதிப்பு 56,500 கோடி ரூபாய் இருக்கும் .

இந்தியாவில், கேரளாவில் இரு இடங்களிலும், சமீபத்தில் கர்நாடகாவிலும் கிளைகள் உள்ளது. தமிழ்நாடு, ஆந்திரா, குஜராத் உள்ளிட்ட மாநிலங்களில் கிளைகளை அமைக்க தயாராகிவருகிறது.

இதனால் மக்கள் ஒரே இடத்தில் பொருள்களை வாங்கிக் கொள்ளலாம், நமது பட்ஜெட்டுக்கு ஏற்ப பொருள்களை வாங்கவும் செய்யலாம். ஆனால் இதன்மூலம் சிறு, குறு வியாபாரிகள் முதல் உள்ளூர் சூப்பர் மார்க்கெட் வரை பாதிக்கப்படும்

அடுத்த 3 ஆண்டுகளில் 15,000க்கும் மேற்பட்ட நேரடி மற்றும் மறைமுக வேலை வாய்ப்புகளை உருவாக்குவோம் என லூலூ நிறுவனம் கூறியுள்ளது. தமிழ்நாட்டில் லூலூ நிறுவனம் அமைவதால், வேலைவாய்ப்பு உருவாகும் என்றாலும் கீழ்மட்ட பணிகளில் மட்டுமே பலரும் பணியமர்த்தப்படுவார்கள். உடல் உழைப்பு சார்ந்த மற்றும், கணக்குகள் பார்ப்பது போன்ற வேலைகளே அதிகம் கிடைக்க வாய்ப்புகள் உள்ளன. தற்போது இதுபோன்ற வேலைகளுக்கு தமிழ்நாட்டில் வட இந்தியர்களே பணியமர்த்தப்படுகின்றனர். நாளை லூலூ ஹைபர் மார்கெட் வந்தாலும் அந்த வேலைகளும் வட இந்தியர்களுக்குத் தான் செல்லும்.

இங்கு பொறியியல் உள்ளிட்ட பல்வேறு பட்ட, பட்டய படிப்புகளை முடித்துவிட்டு வேலை தேடும் இளைஞர்கள், தங்களது படிப்புக்கு தொடர்பில்லாமல் கிடைத்த வேலைகளை செய்துவருகின்றனர். படித்த இளைஞர்களுக்கு ஏற்ற வேலைவாய்ப்புகளை உருவாக்கும் வகையில் தொழிற்சாலைகள் அமைப்பது சார்ந்த தொழில் முதலீடுகளை ஈர்க்க வேண்டும்,

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!