விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரன் உயிருடன் நலமாக உள்ளார்: பழ. நெடுமாறன்

பைல் படம்.
இலங்கையில் 2009-ம் ஆண்டு நடைபெற்ற இறுதிப் போரில் விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரன் வீரமரணம் அடைந்ததாக கூறப்பட்டது. அந்த சமயத்தில் விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் பிரபாகரன் போரில் இறந்துவிட்டதாக அறிவித்த இலங்கை அரசு, அது தொடர்பான புகைப்படங்களையும் பகிர்ந்தது. இந்நிலையில் தஞ்சை முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தில் செய்தியாளர்களிடம் பேசிய உலகத் தமிழர் பேரமைப்பின் தலைவர் பழ.நெடுமாறன், பிரபாகரன் உயிருடனும், மிக நலமுடனும் இருக்கிறார் என்பதை உறுதியுடன் தெரிவித்துக் கொள்வதாக குறிப்பிட்டார்.
இலங்கையில் ராஜபக்சக்களின் ஆட்சி முடிவுக்கு வந்திருப்பதாலும், சர்வதேச சூழல் தற்போது தமிழர்களுக்கு சாதகமாக இருப்பதாலும் இந்த அறிவிப்பை வெளியிடுவதாகவும் அவர் கூறினார். பிரபாகரன் விரைவில் தமிழீழம் பற்றிய விரிவான திட்டத்தை அறிவிக்கவுள்ளதாக கூறிய பழ.நெடுமாறன், அதற்கு உலகம் முழுவதும் உள்ள தமிழர்கள் ஆதரவளிக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார். பிரபாகரன் குடும்பத்துடன் தமக்கு தொடர்பு இருப்பதாக தெரிவித்த பழ.நெடுமாறன், இந்த செய்தியை அவர்களுடைய அனுமதியுடன் தெரிவிப்பதாக கூறினார்.மேலும் பிரபாகரன் விரைவில் பொது இடத்தில் தோன்றுவார் என்றும் பழ.நெடுமாறன் கூறினார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu