8 ஆண்டுகளுக்கு பின் குறைந்த நிதி பற்றாக்குறை: நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் ராஜன்

8 ஆண்டுகளுக்கு பின் குறைந்த நிதி பற்றாக்குறை: நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் ராஜன்
X

தமிழக நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன்

அதிமுக அரசின் 10 ஆண்டு முடிவில் தமிழ்நாட்டின் கடன் ரூ.4.85 லட்சம் கோடியாக உயர்ந்துவிட்டது -நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் ராஜன்

8 ஆண்டுகளுக்கு பின் அரசின் நிதி வருவாய் பற்றாகுறை குறைகிறது என்று நிதியமைச்சர் பட்ஜெட் தாக்கலின் போது தனது உரையில் பேசினார். 8 ஆண்டுகளுக்கு பின் அரசின் நிதி வருவாய் பற்றாக்குறை குறைகிறது என்பது மாநிலத்தின் வளர்ச்சிக்கு சாதகம் ஆகும்.

கடந்த 2011ஆம் ஆண்டில் அதிமுக ஆட்சிக்கு வந்த போது தமிழ்நாடு அரசின் கடன் சுமை ரூ.1.14 லட்சம் கோடியாக இருந்து என்றும், 2021ஆம் ஆண்டு அதிமுக அரசின் 10 ஆண்டு முடிவில் தமிழ்நாட்டின் கடன் ரூ.4.85 லட்சம் கோடியாக உயர்ந்துவிட்டது என்றும் நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் ராஜன் வெளியிட்ட வெள்ளை அறிக்கையில் தெரிவித்திருந்தார்.

மேலும் தமிழக அரசின் வருமானம் மிகவும் குறைந்திருந்ததையும், அரசின் அன்றாட செலவுகளுக்கே கடன் வாங்கும் நிலை அதிமுக ஆட்சியில் இருந்தது என்பதையும் நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் ராஜன் சுட்டிக் காட்டினார். 2014 முதல் வருவாய் பற்றாக்குறை அச்சுறுத்தும் வகையில் அதிகரித்து வருகிறது. இந்த ஆண்டு அதனை மாற்றும் வகையில் இந்த அண்டு 3.8 சதவீதமாக வருவாய் பற்றாக்குறை குறையவுள்ளது என்று தமிழக நிதியமைச்சர் தனது பட்ஜெட் உரையில் குறிப்பிட்டார்.

Tags

Next Story
ஆள் இல்லாமலே இயங்கும் விமானம்,அமெரிக்க விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பு