/* */

மக்களவை தேர்தல் பாதுகாப்பு பணியில் 19 ஆயிரம் துணை ராணுவப் படையினர்

சென்னையில் 2 ஆயிரம் துணை ராணுவப் படை வீரர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடவுள்ளனர்.

HIGHLIGHTS

மக்களவை தேர்தல் பாதுகாப்பு பணியில் 19 ஆயிரம் துணை ராணுவப் படையினர்
X

தேர்தல் பணியில் துணை ராணுவப் படையினர் 

நாடு முழுவதும் 18-வது நாடாளுமன்ற தேர்தல் நாளை (ஏப்ரல் 19) தொடங்கி வரும் ஜூன் 1-ம் தேதி வரை 7 கட்டங்களாக நடைபெறுகிறது. தமிழகம்-புதுச்சேரியில் உள்ள 40 நாடாளுமன்ற தொகுதிகளிலும் முதல் கட்டத்திலேயே தேர்தல் நடக்கிறது. இந்த 40 தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு நாளை (வெள்ளிக்கிழமை) நடைபெறுகிறது. இதையொட்டி, தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் வாக்குச்சாவடிகள் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. அத்துடன், வாக்குப்பதிவு எந்திரங்களை அனுப்பிவைக்கும் பணிகளும் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில், நாடாளுமன்ற தேர்தலையொட்டி, தமிழகத்தில் நாளை 19 ஆயிரம் துணை ராணுவப் படையினர் பாதுகாப்பு பணிகளில் ஈடுபடவுள்ளனர். இதற்காக பல்வேறு பகுதிகளில் இருந்து துணை ராணுவப் படையினர் தமிழகம் வந்துள்ளனர். சென்னையில் 2 ஆயிரம் துணை ராணுவ படை வீரர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடவுள்ளனர்.

மேலும், வாக்குப்பதிவு முடிந்தவுடன், வாக்குப் பெட்டிகள் வைக்கப்படும் மையங்களிலும் 1,500 துணை ராணுவப் படையினர் ஈடுபட உள்ளனர். தேர்தல் அமைதியான முறையில் நடைபெறுவதற்காகவும், அசம்பாவிதங்களை தடுப்பதற்காகவும் துணை ராணுவ படையினர் பாதுகாப்பு பணிகளில் ஈடுபட உள்ளனர்.

Updated On: 18 April 2024 11:53 AM GMT

Related News

Latest News

  1. தமிழ்நாடு
    தமிழகத்தில் தேனி, விருதுநகர், தென்காசி மாவட்டங்களுக்கு கனமழை...
  2. இந்தியா
    தொலை தொடர்புத் துறை பெயரில் போலி அழைப்புகள்: மத்திய அரசு எச்சரிக்கை
  3. லைஃப்ஸ்டைல்
    அன்னைக்கு இன்னைக்கு பிறந்தநாள்..! வாழ்த்துகிறோம்..!
  4. லைஃப்ஸ்டைல்
    வார்த்தைகளால் பூ தொடுத்து அக்காவுக்கு பிறந்தநாள் வாழ்த்து..!
  5. இந்தியா
    உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்த நான்கு மாத குழந்தை!
  6. திருச்சிராப்பள்ளி மாநகர்
    திருச்சி கோர்ட்டில் ஆஜர்: சவுக்கு சங்கர் லால்குடி கிளை சிறையில்...
  7. லைஃப்ஸ்டைல்
    வீட்டில் இருந்தபடியே பெண்கள் சம்பாதிப்பது எப்படி?
  8. ஆன்மீகம்
    நடப்பாண்டில் வைகாசி விசாகம் எப்போது வருகிறது தெரியுமா?
  9. லைஃப்ஸ்டைல்
    ருசியான எண்ணெய் கத்திரிக்காய் கிரேவி செய்வது எப்படி?
  10. கல்வி
    எமிஸ் தளத்தில் பொது மாறுதல் கேட்டு விண்ணப்பித்த 13,484 ஆசிரியர்கள்