மக்களவை தேர்தல் : தமிழ்நாட்டில் எப்போது வாக்குப்பதிவு?

மக்களவை தேர்தல் : தமிழ்நாட்டில் எப்போது வாக்குப்பதிவு?
X

தேர்தல் - கோப்புப்படம் 

தமிழ்நாட்டில் ஒரே கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி வெள்ளிக்கிழமை தேர்தல் நடைபெறும் என்று தலைமைத் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது

நாடாளுமன்ற மக்களவையின் பதவிக்காலம் வருகின்ற ஜூன் 16 ஆம் தேதியுடன் நிறைவடைய உள்ளது. இதையடுத்து, 18 ஆவது மக்களவைக்கான தேர்தல் அறிவிப்பு தொடர்பாக தலைமைத் தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் மற்றும் புதிதாக தேர்வு செய்யப்பட்ட தேர்தல் ஆணையர்கள் சுக்வீர் சிங் சந்து, கியானேஷ் குமார் ஆகியோர் டெல்லியில் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர்.

அப்போது, நாடு முழுவதும் 7 கட்டங்களாக தேர்தல் நடைபெறும் என அறிவித்த தலைமைத் தேர்தல் ஆணையர், தமிழ்நாட்டில் ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறும் என தெரிவித்தார். அதன்படி, தமிழ்நாட்டில் உள்ள 39 மக்களவைத் தொகுதிகளுக்கும் ஏப்ரல் 19 ஆம் தேதி (வெள்ளிக்கிழமை) தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.

தமிழ்நாட்டில் தேர்தலை முன்னிட்டு வருகின்ற மார்ச் 20 ஆம் தேதி வேட்பு மனு தாக்கல் தொடங்கும்.

  • வேட்பு மனு தாக்கல் செய்ய கடைசி தேதிமார்ச் 27
  • வேட்பு மனுக்கள் மீதான பரிசீலனை மார்ச் 28
  • வேட்புமனு திரும்பப்பெற கடைசி நாள் மார்ச் 30

கன்னியாகுமரி மாவட்டம் விளவங்கோடு தொகுதியில் எம்எல்ஏ ஆக இருந்த விஜயதரணி, காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி அண்மையில் பாஜகவில் இணைந்தார். இதையடுத்து அந்த தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டது. தமிழ்நாட்டில் வருகின்ற ஏப்ரல் 19 ஆம் தேதி மக்களவைத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் அன்றைய தினம் விளவங்கோடு சட்டப்பேரவை தொகுதிக்கும் இடைத் தேர்தல் ஒன்றாக நடைபெற உள்ளது.

தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறும் நிலையில், ஜூன் 4 ஆம் தேதி நாடு முழுவதும் வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!