தமிழகத்தில் இன்று பொதுமுடக்கம்: வெளியே சுற்றினால் நடவடிக்கை பாயும்

தமிழகத்தில் இன்று பொதுமுடக்கம்: வெளியே சுற்றினால் நடவடிக்கை பாயும்
X
கொரோனா பரவலை தடுக்கும் வகையில், தமிழகத்தில் 2வது வாரமாக இன்று பொதுமுடக்கம் அமலில் உள்ளது; தேவையின்றிவெளியே சுற்றுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கொரோனா வைரஸ், உருமாற்ற திரிபான ஒமிக்ரான் பரவல் அதிகரித்து வருகிறது. இதை கட்டுப்படுத்த, தமிழக அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை அறிவித்தது. அதன்படி, கடந்த 6 ஆம் தேதி முதல், தமிழகத்தில் இரவு நேர முடக்கம் அறிவிக்கப்பட்டு அமலில் உள்ளது. அத்துடன், கடந்த 9ம் தேதி ஞாயிற்றுக்கிழமை முழு பொதுமுடக்கம் அமல்படுத்தப்பட்டது.

இன்று, இரண்டாவது நாளாக தமிழகத்தில் முழு பொதுமுடக்கம் அமலில் உள்ளது. எனவே, காய்கறி, மளிகை கடைகள், வணிக நிறுவனங்கள், சினிமா தியேட்டர்கள் மூடப்பட்டுள்ளன. ஓட்டல்களில் பார்சல் சேவை மட்டும் வழங்கப்படும். வாகனப் போக்குவரத்து மற்றும் மெட்ரோ ரயில் சேவை இயங்காது. ஆனால் மின்சார ரயில் மட்டும் குறைந்த எண்ணிக்கையில் இயங்கும்.

மேலும், ரயில், விமான பயணிகள் சொந்த மற்றும் வாடகை வாகனங்களில் செல்ல அனுமதி அளிக்கப்படுகிறது. ஆனால் போலீசாரின் வாகன சோதனையின்போது பயணச்சீட்டை கட்டாயம் காண்பிக்க வேண்டும். முழு பொதுமுடக்கம் காரணமாக, தமிழகத்தில், 60 ஆயிரம் போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட உள்ளனர். இன்று தேவையின்றி வாகனங்களில் நடமாடினால், வழக்குப்பதிவு செய்யப்பட்டு வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும் என்று போலீசார் எச்சரித்து உள்ளனர்.

Tags

Next Story
Weight Loss Tips In Tamil