தமிழகத்தில் கொரோனா கட்டுப்பாடு ஜன.31 வரை நீட்டிப்பு; ஜன.16ல் ஊரடங்கு

தமிழகத்தில் கொரோனா கட்டுப்பாடு ஜன.31 வரை நீட்டிப்பு; ஜன.16ல் ஊரடங்கு
X
தமிழகத்தில் ஊரடங்கு கட்டுப்பாடுகள் ஜனவரி 31 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது; ஜன.16ஆம் தேதி முழு முடக்கம் அமலில் இருக்கும்.

தமிழகத்தில் கொரோனோ தொற்று பாதிப்புகளை கட்டுப்படுத்தும் வகையில் பல்வேறு கட்டுப்பாடுகளை தமிழக அரசு அறிவித்துள்ளது. அதன்படி, கொரோனா பரவலை கட்டுப்படுத்த தற்போதுள்ள கட்டுப்பாடுகள், ஜனவரி 31 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

காணும் பொங்கல் தினமான ஜனவரி 16ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை முழு முடக்கம் அறிவிக்கப்பட்டுள்ளது. ஜனவரி 18,ல் தைப்பூசம் என்ற நிலையில், ஜனவரி 14, ஆம் தேதி முதல், 18,ஆம் தேதி வரை அனைத்து வழிபாட்டு தலங்களிலும் பக்தர்களுக்கு அனுமதியில்லை என்றும் தமிழக அரசு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொங்கல் பண்டிகைக்காக வெளியூர் செல்லும் சிறப்புப் பேருந்துகளில் செல்வோர் நலனை கருத்தில் கொண்டு 75% பயணிகள் அமர்ந்து பயணிக்க அனுமதிக்கப்பட்டுள்ளது. அத்துடன், ஏற்கனவே முழு முடக்க காலத்தில் தடைசெய்த மற்றும் அனுமதித்த இதர கட்டுப்பாடுகள், ஜனவரி, 31, வரை தொடரும் என, அரசின் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, கொரோனா கட்டுப்பாடுகளை நீட்டிப்பது தொடர்பாக, சென்னை தலைமை செயலகத்தில் இன்று பிற்பகல் 11 மணியளவில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. முதல்வர் ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில், சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், தலைமை செயலாளர் இறையன்பு, சுகாதாரத்துறை செயலாளர் மற்றும் சுகாதாரத்துறை அதிகாரிகள் மற்றும் தமிழ்நாடு அரசின் முக்கிய அதிகாரிகள் பங்கேற்றனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!