ஊரடங்கில் மேலும் பல தளர்வுகள்? வரும் 14ல் முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை

ஊரடங்கில் மேலும் பல தளர்வுகள்? வரும் 14ல் முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை
X
தமிழகத்தில் கொரோனா ஊரடங்கில் மேலும் தளர்வுகள் அளிப்பது தொடர்பாக, முதல்வர் ஸ்டாலின், பிப்ரவரி 14ல் மருத்துவர்கள், அதிகாரிகளுடன் ஆலோசனை செய்கிறார்.

கொரோனா, ஒமிக்ரான் பாதிப்புகள் படிப்படியாக குறைந்து வருகிறது. இதனால், அரசு பல்வேறு தளர்வுகளை அறிவித்தது. இதனால், பள்ளிகள் திறக்கப்பட்டு வகுப்புகள் நடைபெற்று வருகிறது.

இதனிடையே, கொரோனா பரவல் காரணமாக தற்போது அமலில் உள்ள ஊரடங்கு கட்டுப்பாடுகள் வரும் 15 ஆம் தேதியுடன் முடிய உள்ளன. கொரோனாவும் குறைந்து வரும் சூழலில், கூடுதல் தளர்வுகள் அறிவிப்பது தொடர்பாக, அரசு பரிசீலித்து வருகிறது.

இது குறித்து, வரும் 14 ஆம் தேதி, சென்னை தலைமைச் செயகலத்தில் முதல்வர் மு.க ஸ்டாலின் ஆலோசனை நடத்துகிறார். இதில், மருத்துவத்துறை நிபுணர்கள் மற்றும் உயர் அதிகாரிகள் கலந்து கொள்கின்றனர்.

தற்போது 1 முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பள்ளிகள் செயல்பட்டு வரும் சூழலில், மழலையர் பள்ளி வகுப்புகள் திறப்பது குறித்து, இதில் அறிவிப்பு வெளியாகும் என்று தெரிகிறது.

Tags

Next Story
கொடுமுடியில் விவசாயிகள் போராட்டம் - அதிகாரிகள் செயலாற்றாமல் இருந்ததா