நர்சரி பள்ளி திறப்பு: மார்ச் 2 வரை கூடுதல் தளர்வுடன் லாக்டவுன் நீட்டிப்பு

நர்சரி பள்ளி திறப்பு: மார்ச் 2 வரை கூடுதல் தளர்வுடன் லாக்டவுன் நீட்டிப்பு
X
தமிழகத்தில், மார்ச் 2 வரை கூடுதல் தளர்வுடன் கொரோனா கட்டுப்பாடுகள் நீட்டிக்கப்பட்டுள்ளன.

தமிழகத்தில் மார்ச் 2ம் தேதி வரை கூடுதல் தளர்வுகளுடன் கொரோனா ஊரடங்கு நீட்டித்து முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். அதன்படி, தமிழ்நாட்டில் தொடர்ந்து தொற்றுப் பரவலை கட்டுக்குள் வைக்கவும், குறைக்கவும், பின்வரும் கட்டுப்பாடுகள் மட்டும் 16-2-2022 முதல் 2-3-2022 வரை நடைமுறைப்படுத்தப்படும்.

அதன்படி, தமிழகத்தில் வரும், 16, தேதி முதல், நர்சரி பள்ளிகள் மற்றும் மழைலையர் விளையாட்டுப் பள்ளிகள் திறக்க அனுமதியளிக்கப்படுகிறது. பொருட்காட்சிகள் நடத்த அனுமதியளிக்கப்படுகிறது. திருமணம், அது சார்ந்த நிகழ்வில், 200 பேர் பங்கேற்கலாம்; துக்க நிகழ்வுகள் 100 நபர்களுக்கு மிகாமல் அனுமதிக்கப்படும்.

பொருட்காட்சி நடத்தவும் அரசின் கூடுதல் தளர்வில் அனுமதி தரப்படுகிறது. திரையரங்கு, உணவகங்களில் 100% இருக்கைகளுக்கு அனுமதி தரப்படுகிறது. சமுதாய, கலாச்சார மற்றும் அரசியல் கூட்டங்கள் போன்ற பொது மக்கள் கூடும் நிகழ்வுகளுக்கு உள்ள தடை தொடரும்.

மேற்கண்ட கட்டுப்பாடுகள் தவிர்த்து கொரோனா தடுப்பு நடவடிக்கைக்காக விதிக்கப்பட்ட ஏனைய கட்டுபாடுகள் விலக்கிக் கொள்ளப்படுவதாக, அரசின் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags

Next Story
கொடுமுடியில் விவசாயிகள் போராட்டம் - அதிகாரிகள் செயலாற்றாமல் இருந்ததா