உள்ளாட்சி தொழிலாளர்கள் பிப்ரவரி 16-ம் தேதி வேலை நிறுத்த போராட்டம்

உள்ளாட்சி தொழிலாளர்கள் பிப்ரவரி 16-ம் தேதி வேலை நிறுத்த போராட்டம்
திருச்சியில் அனைத்து உள்ளாட்சி தொழிலாளர்கள் சங்க கூட்டம் நடைபெற்றது.
உள்ளாட்சி தொழிலாளர்கள் தமிழகம் முழுவதும் பிப்ரவரி 16-ம் தேதி வேலை நிறுத்த போராட்டம் நடத்துவது என முடிவு செய்யப்பட்டது.

ஒப்பந்த தொழிலாளர் முறையைக் கைவிட வலியுறுத்தி ஒரு நாள் வேலை நிறுத்த போராட்டம் நடத்துவது என திருச்சியில் நடைபெற்ற அனைத்து உள்ளாட்சி தொழிலாளர் சங்கக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

தமிழ்நாட்டில் உள்ள மாந16ராட்சி, நகராட்சி, பேரூராட்சி மற்றும் ஊராட்சிகளில் பணியாற்றும் உள்ளாட்சித் தொழிலாளர் சங்கங்களின் ஆலோசனைக் கூட்டம் இன்று (28-01-2024) திருச்சி, மத்திய பேருந்து நிலையம் அருகில் உள்ள தனியார் ஓட்டல் அரங்கில் நடைபெற்றது.

கூட்டத்திற்கு நிர்வாகிகள் முருகானந்தம், பாலகிருஷ்ணன், பஞ்சலிங்கம் ஆகியோர் தலைமை வகித்தனர். ஏ.ஐ.டி.யு.சி. மாநில செயலாளர் சின்னசாமி, ஏ.ஐ.டி.யு.சி. திருச்சி மாவட்ட பொதுச் செயலாளரும், மாநகராட்சி கவுன்சிலருமான கே.சுரேஷ் உள்ளாட்சித்துறை பணியாளர் சங்க செயலாளர் ஆர்.மணியன், தமிழ்நாடு நகராட்சி, மாநகராட்சி அலுவலர் சங்க மாநில செயலாளர் தாமோதரன், சி.ஐ.டி.யு. சங்க நிர்வாகிகள் திருவாரூர் சிவசுப்பிரமணியம், ரகுபதி, எல்.பி.எப் .சங்க செயலாளர் ஈரோடு ஆர்.கிருஷ்ணன் உள்ளிட்ட பல்வேறு சங்கத் தலைவர்கள் கலந்து கொண்டனர்.


இந்த கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட கோரிக்கை தீர்மானங்கள் வருமாறு:-

1) 44 தொழிலாளர் சட்டங்களை 4 சட்டத் தொகுப்புகளாக்கி உள்ளதை மத்திய அரசு கைவிட வேண்டும்.

2) நிரந்தரத் தன்மையுடைய தொழில்களில் ஒப்பந்தத் தொழிலாளர் முறையைக் கைவிட வேண்டும்.

3) உள்ளாட்சித்துறையில் காண்ட்ராக்ட், அவுட் சோர்சிங், சுய உதவிக்குழு போன்ற தொழிலாளர் முறைகளை கைவிட வேண்டும். இது தொடர்பான அரசாணைகளை (GO No'S: 111, 112, 113, 116,152, 10,139) உடனடியாக ரத்து செய்ய வேண்டும்.

4) மாநகராட்சிகள், நகராட்சிகள், மற்றும் பேரூராட்சிகளில் ரத்து செய்யப்பட்டுள்ள சுமார் 50,000 சி மற்றும் டி பிரிவு நிரந்தரப் பணியிடங்களை மீண்டும் வழங்க வேண்டும்.

5) உள்ளாட்சி அமைப்புகளில் மக்கள் தொகை, விஸ்தீரணம் அடிப்படையில் அளவுகோல் (Norms) படி நிரந்தர பணியாளர்களை நியமிக்க வேண்டும்.

6) 480 நாட்கள் பணியாற்றிய தொழிலாளர்கள் அனைவரையும் பணி நிரந்தரப்படுத்தி காலமுறை ஊதியம் வழங்க வேண்டும்.

7) சமவேலைக்கு சமஊதியம் வழங்க வேண்டும் என்ற உச்ச நீதிமன்றத் தீர்ப்பை அமலாக்க வேண்டும்.

8) மாநகராட்சிகள், நகராட்சிகள், பேரூராட்சிகள் மற்றும் ஊராட்சிகளில் பணியாற்றும் தினக்கூலி தூய்மைப் பணியாளர்களை பணி நிரந்தரப்படுத்தும் வரை, தொழிலாளர் துறை அரசாணை 62-ன் படியான பின்வரும் குறைந்தபட்ச ஊதியத்தை முன்தேதியிட்டு அமலாக்க வேண்டும்

மாநகராட்சிகளில் நாளொன்றுக்கு ரூ.725/, நகராட்சிகளில் நாளொன்று ரூ.610/-, பேரூராட்சிகளில் நாளொன்றுக்கு.533/- ஊராட்சிகளில் நாளொன்றுக்கு ரூ.438/- வழங்க வேண்டும்.

9) புதிய பென்ஷன் திட்டத்தை கைவிட்டு பழைய பென்ஷன் திட்டத்தை அமலாக்க வேண்டும்.

மேற்கண்ட கோரிக்கைகளை வலியுறுத்தி வருகிற 16-02-2024 அன்று தமிழகம் முழுவதும் உள்ளாட்சித் தொழிலாளர்கள் ஒரு நாள் வேலை நிறுத்த போராட்டம் நடத்துவது.

Tags

Next Story