எம்.ஜி.ஆர் நினைவு தினத்தில் மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் மரியாதை

எம்.ஜி.ஆர் நினைவு தினத்தில் மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் மரியாதை
X

மத்திய தகவல் ஒலிபரப்பு மற்றும் மீன்வளம், கால்நடை பராமரிப்பு & பால்வளம் இணை அமைச்சர்  எல்.முருகன்

மக்களால் என்றென்றும் போற்றப்படுவர் பாரத ரத்னா எம்.ஜி.ராமச்சந்திரன் - எல். முருகன்

தமிழக முன்னாள் முதலமைச்சர் டாக்டர் எம்.ஜி. ராமச்சந்திரனின் நினைவு தினம் இன்று (24.12.2021) கடைபிடிக்கப்படுகிறது. இந்நாளையொட்டி, மத்திய தகவல் ஒலிபரப்பு மற்றும் கால்நடை, பால்வளம் & மீன்வளத்துறை இணை அமைச்சர் எல்.முருகன், முன்னாள் முதலமைச்சர் எம்.ஜி.ஆரை நினைவு கூர்ந்தார்.

எல். முருகன் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில்;

திரையுலகில் தலைசிறந்த நடிகராக! தனக்கென தனி தடம் பதித்து அரசியலில் ஈடுபட்டு மக்களுக்காக பணிகள் செய்து மக்களால் என்றென்றும் போற்றப்படும் பாரத ரத்னா எம்.ஜி.ராமச்சந்திரன் அவர்களை நினைவு கொள்வோம் என்று தெரிவித்துள்ளார்.

Tags

Next Story
மக்கள் தாங்கள் வரியை செலுத்த வேண்டும் என திருச்செங்கோடு நகராட்சி ஆணையா் வேண்டுகோள்!