வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை மாவட்டத்தில் மது விற்பனை ரூ.9.39 கோடி

வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை மாவட்டத்தில் மது விற்பனை ரூ.9.39 கோடி
X

பைல் படம்

தீபாவளியை முன்னிட்டு வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை மாவட்டத்தில் ரூ.9.39 கோடிக்கு மது விற்பனை நடைபெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தீபாவளியை முன்னிட்டு வேலூர், திருப்பத்தூர் மற்றும் ராணிப்பேட்டை மாவட்டத்தில் ரூ.9.39 கோடிக்கு மது விற்பனை நடைபெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து டாஸ்மாக் அதிகாரிகள் கூறுகையில், வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை ஆகிய மாவட்டங்கள் டாஸ்மாக் நிர்வாக வசதிக்காக வேலூர், அரக்கோணம் என 2 கோட்டங்களாக பிரிக்கப்பட்டுள்ளன.

வேலூர் கோட்டத்தில் வேலூர், திருப்பத்தூர் ஆகிய மாவட்டங்களும், அரக்கோணம் கோட்டத்தில் ராணிப்பேட்டை மாவட்டமும் உள்ளன. வேலூர் கோட்டத்தில் 115 கடைகளும், அரக்கோணம் கோட்டத்தில் 88 கடைகளும் உள்ளன. தீபாவளி பண்டிகையையொட்டி நேற்று வழக்கத்தைவிட டாஸ்மாக் கடைகளில் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. இதனால் டாஸ்மாக் மதுபானக் கடைகளில் மது விற்பனை சூடுபடித்தது.

வேலூர், திருப்பத்தூர் மாவட்ட டாஸ்மாக் மதுபானக் கடைகளில் நேற்று ரூ.5.37 கோடிக்கு மதுபானங்கள் விற்பனை ஆனது. ராணிப்பேட்டை மாவட்டத்தில் ரூ.4.02 கோடிக்கு மதுபானங்கள் விற்பனை யானது. மொத்தம் ரூ.9.39 கோடிக்கு மதுபானங்கள் விற்பனையானது. கடந்த ஆண்டு தீபாவளி விற்பனையை காட்டிலும் இந்த ஆண்டு அதிக அளவில் மது விற்பனையானதாக டாஸ்மாக் அதிகாரிகள் தெரிவித்தனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!