மதுபான கொள்கை வழக்கு: டெல்லி முதல்வர் கெஜ்ரிவாலுக்கு சிபிஐ சமன்

மதுபான கொள்கை வழக்கு: டெல்லி முதல்வர் கெஜ்ரிவாலுக்கு சிபிஐ சமன்
X

டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் (கோப்பு படம்)

முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் வரும் 16ம் தேதி சி.பி.ஐ முன் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும்

மதுபான கொள்கை வழக்கில் டில்லி ஆம் ஆத்மி கட்சி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு சி.பி.ஐ. சம்மன் அனுப்பியுள்ளது.

மதுபான கொள்கை முறைகேடு தொடர்பான பண மோசடி வழக்கில் சி.பி.ஐ. மற்றும் அமலாக்கத் துறையினரால் கைதான டில்லி முன்னாள் துணை முதல்வர் மணீஷ் சிசோடியா திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவரது ஜாமின் மனு டில்லி ஐகோர்ட்டில் விரைவில் விசாரணைக்கு வருகிறது.

இந்நிலையில் இந்த வழக்கில் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு உள்ள தொடர்பு குறித்து விசாரணை நடத்திய சி.பி.ஐ. வரும் 16ம் தேதி நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் என சம்மன் அனுப்பியுள்ளது. சி.பி.ஐ. வட்டாரங்கள் கூறியது, மதுபான கொள்கை விவகாரத்தில் முதல்வர் என்ற முறையில் அமல்படுத்தி உத்தரவில் கையெழுத்திட்டுள்ளார் முதல்வர். இதில் பல கோடி ரூபாய் முறைகேடு நடந்துள்ளதற்கு காரணமாக இருந்துள்ளார். இதையடுத்து அவருக்கு சம்மன் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அந்த வட்டாரங்கள் கூறியது

Tags

Next Story
அறச்சலூா்: 200 மாணவர்களின் படைப்புகளுடன் அறிவியல் கண்காட்சி வெற்றிகரமாக முடிந்தது!