செல்போன் பேசிக்கொண்டிருந்த போது மின்னல் தாக்கி 2 இளைஞர்கள் பலி

செல்போன் பேசிக்கொண்டிருந்த போது மின்னல் தாக்கி 2 இளைஞர்கள் பலி
X
செல்லதுரை
பெரம்பலூர் அருகே செல்போன் பேசிக்கொண்டிருந்த போது மின்னல் தாக்கி 2 இளைஞர்கள் பலியானார்கள்.

பெரம்பலூர் அருகே உள்ள கோனேரிப்பாளையம் ஆற்றங்கரை பாலத்தின் வடமேற்கு பகுதி வயல்காட்டில் பெரம்பலூர் கம்பன் நகரை சேர்ந்த சின்னசாமி மகன் செல்லதுரை ( 26 ) , கவுள்பாளையம கிராமத்தை சேர்ந்த கோவிந்தசாமி மகன் ராமர் ( 29 ) , மற்றும் வெங்கடேசன் ( 22 ) ஆகிய மூன்று பெரும் இன்று மதியம் அப்பகுதியில் உள்ள புளியமரத்தின் அடியில் மதுஅருந்திக் கொண்டிருந்தனர்.


அப்போது மூவரில் ஒருவருக்கு செல்போன் அழைப்பு வந்ததையடுத்து செல்போனில் பேசி உள்ளார். அந்த நேரத்தில் காற்றும் மழையும் வீசிக் கொண்டிருந்தது . அதோடு இடி, மின்னலுடன் மழை பெய்தது. அப்போது இடித்த இடி புளியமரத்தின் அடியில் செல்போன் பேசிக் கொண்டிருந்த வாலிபர்கள் மீது தாக்கியது. இதில் சம்பவ இடத்திலேயே செல்லதுரை, ராமர் உயிரிழந்தனர் . காயமடைந்த வெங்கடேசனை அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர் .


இறந்தவர்களின் உடல் அருகில் அவர்களது உறவினர்கள் அமர்ந்து கதறி அழுதனர்.இது குறித்து தகவல் அறிந்த வருவாய் மற்றும் காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று , உடல்களை கைப்பற்றி பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு உடற்கூறு ஆய்விற்காக அனுப்பி வைத்தனர் . இச்சம்பவத்தினால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு காணப்பட்டது .

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!