12 ராசி கட்டங்களுக்கும் உரிய தன்மை, குணங்கள் பற்றி பார்ப்போமா?

12 ராசி கட்டங்களுக்கும் உரிய தன்மை, குணங்கள் பற்றி பார்ப்போமா?
X
12 Rasi Kattam-12 ராசி கட்டங்களுக்கும் உரிய தன்மை, குணங்கள் பற்றி தெரிந்து கொள்ள தொடர்ந்து படிப்போம்.

12 Rasi Kattam-விஞ்ஞானம் என்ன தான் வளர்ந்தாலும், தகவல் தொழில் நுட்பம் உலகையே ஒரு குடையின் கீழ் ஆட்சி செய்தாலும் மக்களுக்கு தற்போது ஆன்மிகத்திற்கு நிகராக நம்பிக்கை ஏற்படுவது ஜோடத்தில் தான். ஜோதிடம் தான் தங்களது தலைவிதியையும் அன்றாட வாழ்க்கையையும் நிர்ணயிப்பதாக மக்கள் நினைக்கிறார்கள். இதன் காரணமாக ஜாதக பரிவர்த்தனையின் நடவடிக்கைகளும் அதிகரித்து வருகிறது.

ஜோதிடத்திற்கு அடிப்படையாக அமைந்து இருப்பது நமது ஜாதகத்தில் உள்ள 12 ராசி கட்டங்கள் தான். இந்த 12 ராசி கட்டங்களின் தன்மை, குணங்கள் என்னென்ன என்பதை பற்றி பார்க்கலாம்.

rasi kattam in tamil12 ராசி கட்டங்கள் ஒரே ஷேப்பில் தான் இருக்கும். மேஷத்தில் ஆரம்பித்து மீனத்தில் முடிவடையும். முதலில் மேஷம், அடுத்து ரிஷபம், மிதுனம், கடகம், சிம்மம், கன்னி, துலாம், விருச்சிகம், தனுசு,மகரம், கும்பம், மீனம் என்ற இந்த வரிசையில் தான் ராசி கட்டங்கள் இதே வடிவமைப்பில் தான் இருக்கும். எல்லாருக்கும் இது ஒரே மாதிரி தான் இருக்கும்.

உருவம்

rasi kattam in tamilஒவ்வொரு ராசிக்கும் ஒரு உருவம் உண்டு. மேஷம் ஆடு. ரிஷபத்திற்கு காளை உருவம். மிதுனத்திற்கு கதை ஏந்திய ஆண் வீணை வாசிக்கும் பெண். கடகம் ராசிக்கு நண்டு. சிம்மம் ராசிக்கு சிங்கம். கன்னி ராசிக்கு கன்னிப்பெண் இருளில் விளக்கேற்றி செல்வதுபோன்றது. துலாம் ராசிக்கு தராசு. விருச்சிகம் ராசிக்கு தேள். தனுசு வில் அம்புடன் கூடிய மனிதனின் இடுப்புக்கு கீழ் மான் உருவம். மகரம் முதலை உருவம். கும்பம் ராசிக்கு ஒரு ஆண் கும்பத்துடன் (குடம்) இருப்பார். மீனம் இரட்டை மீன்கள்.

குணம்

ஒவ்வொரு ராசிக்கும் ஒரு குணம் உண்டு. அது அந்த ராசியின் உருவத்தை பொறுத்தது. பொதுவாக மேஷம் ராசிக்கு உருவம் ஆடு. எப்படி இருக்கும் என்னென்ன செய்யும் அதன் குணநலன்கள் என்ன என்பது ஆராய்ச்சி கூறியது. ரிஷப ராசிக்குரிய உருவம் காளை. மாடு என்னென்ன செய்யும் என்பது ஆராய்ச்சிக்குரியது. ஆராய்ச்சி என்பதை விட ஜோதிட கட்டம் நிறைய விஷயங்களை நமக்கு கற்றுக் கொடுக்கிறது. ரிஷப ராசிக்காரர்கள் தெருவில் நடந்து சென்றால் மாடு முட்டும் அவர்களுடைய உருவ அமைப்பு அதிக சதையுடன் கூடிய மாடு போன்றது.

மிதுனத்துக்கு உரியது கதை ஏந்திய ஆண் வீணை வாசிக்கும் பெண். இதில் இரண்டு விஷயங்கள் இருக்கின்றன. கதை ஏந்திய ஆண் என்பது வீரத்துக்குரியது. வீணை இந்திய பெண் என்பது கலையம்சம் நிறைந்தது. இந்த இரண்டு அம்சங்களும் நிறைந்தது தான் மிதுனம். கடகம் என்றால் நண்டு. நண்டு என்றால் நாம் என்ன சொல்வோம்.ஆகவே நண்டு பற்றி நாம் தான் இனி அதிகம் தெரிந்து கொள்ள வேண்டும். சிம்மம் என்றால் சிங்கம். சிங்கம் எப்போதும் தனியாகத்தான் இருக்கும். இந்த ராசியும் அப்படித்தான் தனித்துவம் வாய்ந்தது. கன்னி என்றால் கன்னிப்பெண் ஒன்று இருட்டில் விளக்கேந்தி செல்கிறாள். இதுதான் கன்னி ராசிக்குரியது. துலாம் ராசிக்குரிய சின்னம் தராசு. தராசு எங்கு இருக்கும். கடையில் வியாபாரம் நடக்கக்கூடிய இடத்தில் இருக்கும். அதனால் இது வியாபாரம் சம்பந்தப்பட்டது. அடுத்து விருச்சிகம் ராசிக்குரிய உருவம் தேள். தேள் என்ன செய்யும் கொட்டும். விருச்சிக ராசிக்காரர்களை எதிர்த்து ஏதாவது செய்தால் அவர்கள் நமது கூடவே இருந்தாலும் தேள் போன்று கொட்டி விடுவார்கள்.

தனுசு ராசிக்குரியது வில் அம்புடன் கூடிய ஆண் இடுப்புக்கு கீழ் மான் உருவம். இதை வைத்து பார்க்கும் போது ஒரு வில் ஏந்திய ஆணுக்கு உள்ள ஆணுக்கு உள்ள திறமை என்ன என்பதை பார்க்க வேண்டும். பொதுவாக தனுசு ராசிக்காரர்கள் ஏதாவது ஒன்றை குறி வைத்து விட்டார்கள் என்றால் அதை கண்டிப்பாக அடைந்து தீர்வார்கள். மகரம் ராசிக்குரியது முதலை உருவம். முதலை பற்றி நமக்கு என்ன தெரியும் முதலை என்றால் முதலை தான். அது என்ன செய்யும் என்பது பற்றி நாம் தெரிந்து கொள்ள வேண்டும்

கும்பம் என்றால் ஒரு ஆண் குடத்துடன் இருப்பது. குடம் என்றால் குடத்துக்குள் என்ன இருக்கும் என்று தெரியாது அதுதான் கும்பம். குடத்திற்குள் என்ன வேண்டுமானாலும் இருக்கலாம் அது நிறைகுடமாக இருக்கலாம். குறை குடமாக இருக்கலாம். கூடத்திற்குள் பாம்பு இருக்கலாம். குடத்திற்குள் ஏதாவது சாப்பிடுகிற பொருள் கூட இருக்கலாம். எதுவுமே தெரியாத ஒரு சஸ்பென்ஸ் போன்றது தான் கும்ப ராசி.

மீனம் என்பது இரண்டு மீன்கள் உருவமாக உள்ளது. மீனம் ராசி பற்றி தெரிந்து கொள்வதற்கு முன்பாக மீன் பற்றி நாம் தெரிந்து கொள்ள வேண்டும். மீன் வாழும் கடலை பற்றியும் தெரிந்து கொள்ள வேண்டும் இப்படி ஒவ்வொரு ராசிக்கும் உரிய உருவங்கள் அதன் சிறப்புகள் அதன் இயல்புகள் பற்றி முழுமையாக தெரிந்து கொண்டால் சோதிடத்தை நாம் கற்றுக் கொள்ளலாம்.

ஆண் பெண் ராசி

அடுத்து முக்கியமாக பார்க்க வேண்டியது எல்லா ராசிக்கும் நாம் பிரித்து வைத்திருக்கிறோம் அல்லவா மனிதர்களில் கூட ஆண் பெண் என்று பிரித்து வைத்திருக்கிறோம். ஆண்களுக்கும் பெண்களுக்கும் தனித்தனி இயல்புகள் உள்ளன. அதைப்போல எல்லா ராசிகளையும் பிரித்து வைத்திருக்கிறார்கள்.

அந்த வகையில் பார்த்தால் மேஷம் ஆண் ராசிக்குரியது. ரிஷபம் பெண் ராசிக்குரியது. மிதுனம் ஆண், கடகம் பெண், சிம்மம் ஆண். கன்னிபெண், துலாம் ஆண், விருச்சிகம் பெண், தனுசு ஆண், மகரம் பெண், கும்பம் ஆண், மீனம் பெண். அதாவது ஒரு ஆண் அடுத்து பெண் என்ற அடிப்படையில் இந்த ராசி கட்டங்கள் அமைந்துள்ளன.

ராசி கட்டத்தில் உடல் உறுப்புகள்

அடுத்து உடல் உறுப்புகள் பற்றி பார்க்க வேண்டும். அதாவது நமது உடம்பிலேயே முக்கியமான 12 உறுப்புகள் உள்ளன. அந்த உறுப்புகளில் எப்படி இந்த 12 ராசிகளும் இருக்கிறது என நீங்கள் கேள்வி எழுப்புவது புரிகிறது. அது பற்றி அடுத்து பார்ப்போம்.


rasi kattam in tamilமுதலில் மேஷத்தில் தலை இருக்கிறது. தலைக்கு கீழ் இருப்பது முகம் அதுதான் ரிஷபம் ராசி. அடுத்து தோள்பட்டை மற்றும் கழுத்து. இது மிதுனம் ராசிக்குரியது. முகத்திற்கு கீழ் இருப்பது மார்பகம் அதாவது நெஞ்சு பகுதி. இது கடகத்திற்கு உரியது. நெஞ்சு பகுதிக்கு கீழ் இருப்பது நமது மேல் வயிறு இது சிம்மத்திற்குரியது. அடுத்து அடி வயிறு இது கன்னி ராசிக்குரியது. அடுத்து நமது இடுப்பு பகுதி அதாவது இடை இது துலாம் ராசிக்குரியது. அடுத்து நமது பிறப்புறுப்பு அதாவது இடுப்பிற்கு கீழ் உள்ளது. இது விருச்சிகம் ராசிக்குரியது. அதற்கு கீழ் இருப்பது தொடை பகுதி இது தனுசு. தொடைக்கு கீழ் இருப்பது முழங்கால் இது மகர ராசிக்கு உரியது. முழங்காலுக்கு கீழ் இருப்பது கணுக்கால் இதுதான் கும்பம் ராசிக்குரியது. அதற்கு கீழ் இருப்பது பாதம் அதாவது நமது உடலில் கடைசி பகுதி தலையில் தொடங்கி பாதத்தில் முடிவடைகிறது. இதுதான் மீனம் ராசிக்கு உரியது. இதுதான் நமது உடலில் இருக்கும் பாகங்கள் இதை புரிந்து கொள்ள வேண்டும்.

12 ராசி கட்டங்களின் திசைகள்

அடுத்து ஒவ்வொரு ராசிக்கும் என்னென்ன திசை இருக்கிறது என்பதை பார்க்கலாம். இந்த திசைகள் பெரும்பாலும் கிழக்கில் இருந்து தான் ஆரம்பிக்கும். அந்த வகையில் மேஷம் கிழக்கு. அதற்கு பக்கத்தில் இருக்கும் ரிஷபம் தெற்கு. அடுத்து மிதுனத்தில் மேற்கு. அடுத்து கடகத்தில் வடக்கு. இதே ஆர்டரில் அடுத்து கிழக்கு, தெற்கு, மேற்கு, வடக்கு, மீண்டும் கிழக்கு, தெற்கு, மேற்கு, வடக்கு என மீனம் வடக்கில் முடிவடையும்.

ராசி கட்டங்களில் பஞ்ச பூதங்கள்

அடுத்து பஞ்சபூதங்கள் என்று சொல்லக்கூடிய அம்சங்களும் இந்த ராசி கட்டங்களில் இருக்கிறது. அது எப்படி என்பதை அடுத்து பார்ப்போம். அதாவது நெருப்பு, நிலம், ஆகாயம், காற்று, நீர். இதுதான் ஐம்பூதங்கள். இதே ஆர்டரில் தான் இந்த ஐம்பூதங்களும் ராசிகளில் அமர்ந்து உள்ளன. அதாவது மேஷத்தில் நெருப்பு, ரிஷபத்தில் நிலம், மிதுனத்தில் காற்று, கடகத்தில் நீர். சிம்மத்தில் இருந்து மீண்டும் அதே ஆர்டரில் ஆரம்பிக்கும்.

ஐம்பூதங்கள் எதற்காக ராசிகளில் வருகிறது. அதாவது நெருப்பு, நிலம், ஆகாயம், நீர் எப்படி இங்கே வருகின்றன என்று கேட்டால் ஒவ்வொன்றிற்கும் ஒரு இயல்பு உண்டு. அதாவது நெருப்பு எப்படி இருக்கும் என்பது அந்த நெருப்பு ராசிக்குரிய தன்மை ஆகும். ஒவ்வொரு ராசிக்குரிய அம்சங்களையும் நாம் தெரிந்து கொண்டால் ஜோதிடத்தை இன்னும் முழுமையாக புரிந்து கொள்ளலாம். இதன்படி ஒவ்வொரு ராசிக்காரர்களுக்கும் அவர்களுடைய திறமை கற்கும் திறன் ஆகியவை மாறுபடும்.


ராசி கட்டங்களில் இடங்கள்

அடுத்து இடங்கள் பற்றி கூட ராசியுடன் தொடர்புபடுத்திக் கூறலாம். 12 ராசிக்கும் இது பற்றி கூறலாம். மேஷம் என்பது மலை சார்ந்த இடம். ரிஷபம் கிராமம் சூழ்ந்த இடம். மிதுனம் நகரம் சார்ந்த இடம். கடகத்தை எடுத்துக் கொண்டால் அது நீர் நிலையை குறிக்கும். சிம்மம் ராசியை எடுத்துக் கொண்டால் அடர்ந்த காட்டை குறிக்கும். கன்னி ராசியை எடுத்துக் கொண்டால் அதுவும் நகரத்தைத் தான் குறிக்கும். துலாம் ராசி கடைவீதியை குறிக்கும் அதாவது வணிகப்பகுதி. அடுத்து விருச்சிகம் ராசியை எடுத்துக் கொண்டால் இது குளத்தின் கரை. தனுசுவை எடுத்துக் கொண்டால் இது ஆற்றங்கரை. மகரமும் ஆற்றங்கரை தான். கும்பம் குளம், கிணறு போன்றவைகளை குறிக்கும். மீனம் ராசி கடல் பகுதியை குறிக்கும்.

இதுதான் ராசி கட்டங்களுக்குரிய அம்சம். ராசி கட்டம் எனக்கூறப்படும் ஒரு வீடை பற்றி நாம் தெரிந்து கொள்வதற்கு முன்பாக இதைப் பற்றி எல்லாம் விரிவாக தெரிந்து கொள்ள வேண்டும்.

சரம், ஸ்திரம், உபயம்

அடுத்து ராசிகளை இன்னொரு விதமாகவும் பிரித்திருக்கிறார்கள். அதாவது சரம், ஸ்திரம், உபயம். மேஷம் சரம்,ரிஷபம் ஸ்திரம், மிதுனம் உபயம். அடுத்து கடகம் சரம், சிம்மம் ஸ்திரம், கன்னி உபயம். இதே ஆர்டரில் தான் 12 ராசிகளும் அடுத்தடுத்து சரம், ஸ்திரம், உபயம் என்கிற அடிப்படையில் மாறி மாறி வந்து இறுதியாக மீனம் உபயத்தில் முடிவடையும்.

அடுத்து சரம் என்றால் என்ன? திறம் என்றால் என்ன? உபயம் என்றால் என்ன என்பதை பற்றி பார்ப்போம். சரம் என்றால் பாஸ்ட் அதாவது வேகமாக இருப்பது. ஸ்திரம் என்றால் ஸ்லோ அதாவது மிக நிதானமாக இருப்பது. உபயம் என்றால் இந்த இரண்டு குணங்களும் கலந்தது. அதாவது வேகமாகவும் இருப்பார்கள், நிதானமாகவும் இருப்பார்கள். அதாவது சரம் ராசிக்காரர்கள் வேகமாக இருப்பார்கள். உதாரணமாக மேஷ ராசிக்காரர்கள் ரொம்ப வேகமாக இருப்பார்கள். அதே போல் ஸ்திரம் ராசிகாரர்கள் கொஞ்சம் ஸ்லோவாக நிதானமாக இருப்பார்கள். உபய ராசிக்காரர்கள் இரண்டும் கலந்து இருப்பார்கள். அதாவது எப்ப வேகமாக இருக்க வேண்டுமோ அப்போது வேகமாக இருப்பார்கள். எப்ப நிதானமாக இருக்க வேண்டுமோ அப்போது பொறுமையாக இருப்பார்கள். இதுதான் உபயம். அந்த வகையில் எல்லா ராசிக்கும் ஒரு தன்மை இருக்கிறது. அதை வைத்தும் நாம் முடிவு செய்யலாம்.

ராசி கட்டத்திற்குரிய நிறம்

அடுத்து நிறம் அதாவது கலர். நிறங்களின் அடிப்படையில் ராசிகளை எப்படி பிரிப்பது என்று தொடர்ந்து பார்க்கலாம்.

மேஷம் ராசிக்குரியது சிகப்பு நிறம். ரிஷபம் ராசி வெண்மை, மிதுனம் பச்சை, கடகம் மங்கிய சிகப்பு, சிம்மம் ஆரஞ்சு கலர், கன்னி ராசிக்கு பல வண்ணங்கள் நிறைந்த மல்டிபிள் கலர் வருகிறது. துலாம் கருப்பு நிறம், விருச்சிகம் பொன் நிறம், தனுசு மஞ்சள் நிறம், மகரம் மங்கலான சிகப்பு நிறம், கும்பம் பழுப்பு நிறம், இறுதியாக மீனம் தூய்மையான வெண்மை நிறம். இப்படி மேஷம் ராசி சிகப்பில் ஆரம்பித்து இறுதியாக வெண்மையான தூய்மையில் மீனம் ராசி முடிவடைகிறது.

குணம்

அதேபோல எல்லா ராசிகளுக்கும் நாம் குணம் எப்படி இருக்கும் என்பதை இனி பார்ப்போம்.

அதாவது ரிஷபம் கோபம், ரிஷபம் அமைதி, மிதுனம் அமைதி, கடகமும் அமைதி. சிம்மம் கோபம், கன்னி அமைதி, துலாம் விருச்சிகம் ஆகிய இரண்டு ராசிகளும் கோபத்தன்மையுடையது. தனுசு அமைதி, மகரம், கும்பம் ஆகிய இரு ராசிகளும் கோபத்தன்மை உடையவை. மீனம் அமைதி. ஆக கோபத்தில் தொடங்கி மீனம் அமைதியில் முடிவடைகிறது. இதன் அடிப்படையில் எந்த ராசிக்காரர்கள் கோபமாக இருப்பார்கள் எந்த ராசிக்காரர்கள் அமைதியாக இருப்பார்கள் என்பதை தெரிந்து கொள்ள முடியும்.

உருவ அமைப்பு

அடுத்து ஒவ்வொரு ராசிக்காரர்களும் உயரம் எப்படி இருப்பார்கள் என்பதை பார்க்கலாம்.

மேஷம் ராசிக்காரர்கள் பொதுவாக குள்ளமாக இருப்பார்கள். ரிஷபம் ராசிக்காரர்களும் குள்ளமாக தான் இருப்பார்கள். மிதுனம், கடகம் ராசிக்காரர்கள் சமமாக அதாவது மீடியமாக இருப்பார்கள். சிம்மம், கன்னி ராசிகாரர்களும் உயரமாக இருப்பார்கள். துலாம், விருச்சிகம் ராசிக்காரர்களும் உயரமாக தான் இருப்பார்கள். தனுசு சமம் அதாவது மீடியமாக இருப்பார்கள். மகர ராசி மீடியமாகதான் இருப்பார்கள். கும்ப ராசிக்காரர்கள் குள்ளமாக இருப்பார்கள். மீன ராசிக்காரர்கள் மீடியமாக இருப்பார்கள். இவைகள் தான் இந்த ராசிகளின் முக்கியமான அம்சங்கள். இன்னும் பல விஷயங்கள் இருக்கிறது. ஆனால் அவை எல்லாவற்றிற்கும் இவைகள் தான் அடிப்படை ஆகும். இவை ஒவ்வொன்றாக தெரிந்து கொண்டால் சோதிடத்தை முழுமையாக கற்றுக் கொள்ளலாம்.

ராசிகளுக்குரிய அதிபதிகள்

12 ராசிகளுக்கும் அதிபதிகள் இருக்கிறார்கள். கிரகங்கள் ஒன்பது தான் இருக்கின்றன. ஆனால் ராசி 12 இருக்கிறது. இதனை எப்படி சமமாக பிரித்துக் கொடுப்பது என்பது பற்றி அடுத்து பார்க்கலாம். ஒவ்வொரு ராசிக்கும் ஒரு அதிபதி இருக்கிறார்கள். அதிபதி என்றால் அந்த அதிபதிகள் தான் அந்த ராசியை ஆட்சி செய்வார்கள்.

மேஷ ராசிக்கு அதிபதி செவ்வாய்,ரிஷபம் ராசிக்கு அதிபதி சுக்கிரன். மிதுனம் ராசிக்கு புதன் அதிபதி. கடகம் ராசிக்கு சந்திரன் அதிபதி. சிம்மம் ராசிக்கு அதிபதி சூரியன். கன்னி ராசிக்கு அதிபதி புதன் தான். துலாம் ராசிக்கு அதிபதி சுக்கிரன். விருச்சிகம் ராசியின் அதிபதி செவ்வாய். தனுசு ராசிக்கு குரு அதிபதி மகர ராசிக்கு அதிபதி சனி. கும்பத்திற்கும் அதிபதி சனிதான். மீனத்திற்கு அதிபதி குரு. கடகத்திற்கு சந்திரன், சிம்மத்திற்கு சூரியன். இந்த இரண்டு ராசிகளுக்கு மட்டும் தான் தலா ஒரு அதிபதி. மீதி எல்லா ராசிக்கும் இரண்டு அதிபதிகள் இருப்பார்கள். அதாவது செவ்வாய் மேஷத்துக்கும் விருச்சிகத்திற்கும் அதிபதி. சுக்கிரன், ரிஷபத்திற்கும் துலாமிற்கும் அதிபதி. புதன் மிதுனத்திற்கும் கன்னிக்கும் அதிபதி. குரு மீனத்திற்கும் தனுசிற்கும் அதிபதி. மகரத்திற்கும் கும்பத்திற்கும் சனி அதிபதி. இப்படித்தான் ராசி கட்டங்களுக்கு அதிபதிகள் அமைந்திருக்கிறார்கள்.

அதிபதிகளின் வேலை என்ன?

அதிபதி என்றால் அவர்கள் தான் முழு ஆட்சி செய்வார்கள். இந்த கிரகங்கள் அந்தந்த வீடுகளில் இருந்தால் அவர்கள் முழு அதிகாரத்தில் இருப்பார்கள். அதைத்தான் நாம் ஆட்சி என சொல்கிறோம்.

உச்சம்

இதே போல உச்சம் என ஒன்று இருக்கிறது. உச்சம் என்பது ஆட்சியை விட சிறந்தது என நினைக்கிறார்கள் அது உண்மை அல்ல. ஆட்சிக்குப் பிறகு நட்பு. நட்புக்கு அப்புறம் சிறந்தது தான் உச்சம். உச்சம் என்று சொன்னால் சூரியன் மேஷம் ராசியில் உச்சம் பெறுவார். சந்திரன் ரிஷபத்தில் உச்சம். குரு கடகத்தில் உச்சம். புதன் அதன் வீடான கன்னி ராசியிலேயே உச்சம். சனி துலாம் ராசியில் உச்சம். செவ்வாய் மகர ராசியில் உச்சம். சுக்கிரன் மீன ராசியில் உச்சம். இதுதான் உச்ச வீடுகள். உச்ச வீடு என்பது ஆட்சியை விட நட்பை விட கொஞ்சம் குறைவாக இருப்பது. வேண்டுமானால் இதனை கொஞ்சம் நட்பு வீடு என வைத்துக் கொள்ளலாம். அதோட பவர் அப்படி. ஆனால் நீச்சம் என்பது சுத்தமாக அந்த கிரகத்திற்கு பவரே இல்லை என்பதை குறிக்கும்.

நீச்சம்

நமக்கு உச்ச வீடு தெரியும். நீச்சம் என்பது எப்படி என்றால் உச்ச வீட்டிற்கு நேர் ஏழாவது வீடு. அதுதான் அந்த கிரகத்தின் நீச்ச வீடு. சூரியனுக்கு மேஷத்தில் உச்சம் என சொல்லிவிட்டோம். அதற்கு அப்படியே ஏழாவது இடம் துலாம். ஆக துலாம் வீட்டில் தான் சூரியன் நீச்சம். அதேபோல சனி துலாமில் உச்சமாக இருந்தது. அதற்கு அப்படியே நேர் எதிரே ஏழாம் வீடு மேஷத்தில் நீச்சம் வரும்.அதேபோலத்தான் எல்லா கிரகங்களும் தான் நிற்கிற வீட்டில் இருந்து ஏழாம் இடத்தில் நீச்சம் பெற்று விடுகின்றன. நீச்சம் என்றால் அந்த கிரகத்திற்கு பவரே இல்லை என்று அர்த்தம். இதற்கும் ஒரு பர்சன்டேஜ் இருக்கிறது. ஆட்சிக்கு 100% கொடுக்கலாம். நட்புக்கு 75% உச்சத்துக்கு 70% கொடுக்கலாம். நீச்சத்துக்கு பவரே இல்லை என்பதால் 10% கொடுக்கலாம்.

கடகத்தில் செவ்வாய் நீச்சம்,சுக்கிரன் கன்னியில் நீச்சம்,சூரியன் துலாமில் நீச்சம், சந்திரன் விருச்சிகத்தில் நீச்சம், குரு மகரத்தில் நீச்சம், புதன் மகரத்தில் நீச்சம், மேஷத்தில் சனி நீச்சம். இவைகள் தான் நீச்ச வீடு.

மூல திரிகோணம்

அடுத்து மூல திரிகோணம் என்றால் என்ன என்பது பற்றி பார்ப்போம். அதாவது மூலத்திரிகோணம் என்பது கிரகங்கள் தனது சொந்த வீட்டில் அதாவது சில கிரகங்கள் இரண்டு வீடுகளில் இருக்கிறார்கள். அந்த ரெண்டு வீட்டில் எந்த வீட்டில் அவர்களுக்கு பவர் அதிகம் உள்ளது என்பதை குறிப்பிடுவது தான். செவ்வாய் கிரகத்திற்கு மேஷத்தில் தான் பவர் அதிகம். சனி கிரகத்திற்கு கும்பத்தில் பவர் அதிகம். குரு தனுசில் பவர் அதிகம். சுக்கிரன் துலாமில் மூலத்திரிகோணம். புதன் கன்னியில் மூலதரிகோணம். சூரியனுக்கு இருப்பது ஒரே வீடு என்பதால் அது சிம்ம ராசிகளில் மூலத்திரிகோணம் ஆகிறது.

இதில் சந்திரனுக்கு மட்டும் ஒரே ஒரு விதிவிலக்கு. சந்திரன் மட்டும் ரிஷபத்தில் மூலத்திரிகோணம். அது தன்னுடைய வீடு அல்லாமல் சுக்கிரன் வீட்டில் மூலதரிகோணம் ஆகிறார். இவைகள் தான் ராசி கட்டங்கள் பற்றிய அடிப்படை தன்மைகள் ஆகும்.



அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Tags

Next Story
கடம்பூரில் வெடிபொருட்கள் பதுக்கிய 5 பேரை கைது செய்த போலீஸ்!