EPFO இ-பாஸ்புக் பதிவிறக்கம் செய்வது எப்படி?

EPFO இ-பாஸ்புக் பதிவிறக்கம் செய்வது எப்படி?
X

பைல் படம்.

EPFO இ-பாஸ்புக் பதிவிறக்கம் செய்வது எப்படி என்பதை தெரிந்துகொள்வோம்.

நாடு முழுவதும் உள்ள அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்களின் மாத ஊதியத்திலிருந்து மத்திய தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு (EPFO) குறிப்பிட்ட தொகையை பிடித்தம் செய்து அவர்களுக்கு கணக்கு உருவாக்கப்பட்டு வரவு வைக்கப்படுகிறது.

அரசு அல்லது தனியார் நிறுவனத்தில் 20க்கும் மேற்பட்டோர் பணியாற்றினால் தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி (EPFO) தொகை பிடித்தம் செய்யப்படுகிறது. இந்த தொகைக்கு வட்டியும் கணக்கீடு செய்யப்பட்டு அவர்களது கணக்கில் வரவு வைக்கப்படுகிறது. கடந்த ஆண்டு 8.50 சதவீதம் வழங்கப்பட்டு வந்த நிலைில், தற்போது பிஎஃப் தொகைக்கு 8.10 சதவீதம் வழங்கப்படுகிறது. இந்த திட்டத்தில் பிஎப் கணக்குதாரர் உயிரிழந்தால், வருங்கால வைப்பு நிதி பணம் அவரின் குடும்பத்திற்கு வழங்கப்படுகிறது.

இந்நிலையில், தற்போது இ – பாஸ்புக் மூலம் EPFO கணக்குதாரர் இருப்புத் தொகையை தெரிந்து கொள்ளும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதில் மாதந்தோறும் பிஎப் தொகை செலுத்தப்படும் விபரங்களை தெரிந்துகொள்ளலாம்.

EPFO இ-பாஸ்புக் பதிவிறக்கம் செய்வது எப்படி?


  1. https://passbook.epfindia.gov.in/MemberPassBook/Login என்ற அதிகாரபூர்வ இணையத்தள முகவரிக்கு செல்ல வேண்டும்.
  2. பின்னர் உங்களின் கணக்கு விவரம், Universal Account Number (UAN) எண்ணை பதிவு செய்து, பாஸ்வேர்டு, கேப்ச்சா கோடு ஆகியவற்றையும் பதிவிட வேண்டும்.
  3. பிறகு திரையில் வரும் லாகின் பட்டனை கிளிக் செய்து உங்கள் ஐடி எண்ணை உள்ளிட வேண்டும்.
  4. உடனே உங்களின் இ-பாஸ்புக் திரையில் தோன்றும். அதை PDF வடிவத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

Tags

Next Story
கொடுமுடியில் விவசாயிகள் போராட்டம் - அதிகாரிகள் செயலாற்றாமல் இருந்ததா