புதிய மின்கட்டண உயர்வால் சிக்கனத்தை நாடும் பொதுமக்கள்.....அப்பப்பா....

தமிழ்நாடு மின்வாரியத்தின் லோகோ. (கோப்பு படம்).
தமிழ்நாட்டில் வீடுகள், வியாபார நிறுவனங்கள், தொழிற்சாலைகள் உள்ளிட்ட அனைத்து வகைகளுக்கும் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் மூலம் மின்சாரம் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. இதற்கான கட்டணம் தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தின் மூலம் நிர்ணயம் செய்யப்பட்டு தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் மூலம் கட்டணம் வசூலிக்கப்பட்டு வருகிறது.
இதற்கிடையே, தமிழ்நாடு மின்சார வாரியத்துக்கு ஒரு லட்சத்து 75 ஆயிரம் கோடிக்கு மேல் கடன் இருப்பதால் மின் கட்டண உயர்வு தவிர்க்க முடியாது என்றும் பொதுமக்களிடம் கருத்துக் கேட்ட பிறகு மின் கட்டணம் உயர்த்தப்படும் என்று் தமிழக மின் துறை அமைச்சர் செந்தில்பாலாஜி அறிவித்திருந்தார்.
சென்னை உள்ளிட்ட நான்கு நகரங்களில் கருத்துக் கேட்புக் கூட்டம் நடத்தப்பட்ட நிலையில், மின் கட்டணத்தை உயர்த்திக் கொள்ள தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் கடந்த மாதம் 10 ஆம் தேதி அனுமதி அளித்தது. தொடர்ந்து, மாற்றி அமைக்கப்பட்ட புதிய மின் கட்டண விவரம் அறிவிக்கப்பட்டது.
100 யூனிட் இலவச மின்சாரம், குடிசை, விசைத்தறி, கைத்தறி, விவசாயம் மற்றும் வழிப்பாட்டுத் தலங்களுக்கு வழங்கப்பட்டு வரும் மின்சார மானியம் தொடர்ந்து வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. வீடு, கைத்தறி, முதியோர் இல்லம், ஆலோசனை அறை ஆகியவற்றுக்கு 101 முதல் 200 யூனிட் வரை ஒரு யூனிட்டுக்கு ரூ. 2.25-ம், 201 முதல் 300 யூனிட் வரை ஒரு யூனிட்டுக்கு ரூ. 4. 50-ம், 301 முதல் 400 யூனிட் வரை ஒரு யூனிட்டுக்கு ரூ. 5-ம் வசூலிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதை பயன்பாட்டுக்கு 500 யூனிட்டுக்கு மேல் முதல் 100 யூனிட்டுக்கு கட்டணம் ஏதும் கிடையாது என்றும் அதற்கு மேல் 101 முதல் 400 யூனிட் வரை யூனிட் ஒன்றுக்கு ரூ. 4.50-ம், 401 முதல் 500 யூனிட் வரை ஒரு யூனிட்டுக்கு ரூ. 6 -ம், 501 முதல் 600 யூனிட் வரை யூனிட் ஒன்றுக்கு ரூ. 8 -ம், 601 முதல் 800 யூனிட் வரை யூனிட் ஒன்றுக்கு ரூ. 9-ம், 801 முதல் 1000 யூனிட் வரை யூனிட் ஒன்றுக்கு ரூ. 10-ம், 1000 யூனிட்டுக்கு மேல் யூனிட் ஒன்றுக்கு ரூ. 11-ம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
தற்காலிக இணைப்பாக புதிய கட்டுமான பணி, கூடுதல் கட்டுமான பணி ஆகியவற்றுக்கு ஒரு யூனிட்டுக்கு கட்டணமாக ரூ. 12 நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. தொழிற்சாலைகள் மற்றும் தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களுக்கு யூனிட் ஒன்றுக்கு ரூ. 7.50-ம், அரசு மற்றும் அரசு சார்ந்த கல்வி நிறுவனங்கள், கல்வி விடுதிகளுக்கு ஒரு யூனிட் கட்டணம் ரூ. 8-ம், தனியார் கல்வி நிறுவனங்கள் மற்றும் விடுதிகளுக்கு ஒரு யூனிட்டுக்கு ரூ. 8.50-ம், பொது வழிபாட்டுத் தலங்களுக்கு 120 யூனிட் வரை ஒரு யூனிட்டுக்கு ரூ. 2.85-ம், 120 யூனிட்டுக்கு மேல் பயன்பாடு இருந்தால் யூனிட் ஒன்றுக்கு ரூ. 7-ம் கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
பொது தெரு விளக்கு, குடிநீர், அங்கன்வாடி, கழிவறைகள், மயானம், உள்ளாட்சி அமைப்புகள், பொது வீட்டு உபயோகம், ரயில்வே, காவலர் குடியிருப்பு ஆகியவற்றின் பயன்பாட்டுக்கு ஒரு யூனிட்டுக்கு ரூ. 8 கட்டணமாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
விசைத்தறி மற்றும் அது சார்ந்த தொழில்களுக்கு 750 யூனிட் வரை கட்டணம் கிடையாது. அதற்கு மேல் 751 முதல் 1000 யூனிட் வரை பயன்பாடு இருந்தால் யூனிட் ஒன்றுக்கு ரூ. 3-ம், 1001 முதல் 1500 யூனிட் வரை பயன்பாடு இருந்தால் யூனிட் ஒன்றுக்கு ரூ. 4.50-ம், 1501 யூனிட்டுக்கு மேல் பயன்பாடு இருந்தால் யூனிட் ஒன்றுக்கு ரூ. 6-ம் கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
இதுதவிர, வணிகப் பயன்பாடுக்கு 100 யூனிட் வரை யூனிட் ஒன்றுக்கு ரூ. 6-ம், 100 யூனிட்டுக்கு மேல் 150 கிலோ வாட் வரை பயன்பாடு இருந்தால் யூனிட் ஒன்றுக்கு ரூ. 9.50-ம் என கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. மேலும், திருமண மண்டபம், வணிக வளாகங்களில் அலங்கார விளக்குகள் உபயோகத்துக்கு கூடுதலாக 5 சதவீதமும், வெல்டிங் செட் உபயோகத்துக்கு கூடுதலாக 15 சதவீதமும் கட்டணம் வசூலிக்கப்படும். இதுமட்டுமின்றி குறிப்பிட்ட சில மின் இணைப்புகளுக்கு மின்சார வரியாக 5 சதவீதம் சேர்த்து வசூலிக்கப்படும் என தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் அறிவித்துள்ளது.
பொதுமக்கள் பாதிப்பு
திடீரென மின்கட்டணம் உயர்த்தப்பட்டதால் நுகர்வோராகிய பொதுமக்கள் ஏற்கனவே உபயோகித்தபடி மின்சாரத்தினை வீடுகளுக்கு உபயோகிப்பதால் அதாவது மின்கட்டண ரீடிங் எடுக்கப்படும்போதுதான் அதாவது பில்எகிறும்போதுதான் அவர்களுக்கு நாம் அதிகமாக உபயோகித்துள்ளோம் என்பதே தெரிய வருகிறது. எனவே பொதுமக்கள் மின்சார சிக்கனம் தேவை இக்கணம் என்ற கருத்துக்கேற்ப வீடுகளில்,அல்லது எங்கு உபயோகப்படுத்தினாலும் தேவையில்லாத இடங்களில் ஸ்விட்ச் ஆஃப் செய்வதுதான் நமக்கு பாதுகாப்பு. அநாவசியமாக எரிந்துகொண்டிருந்தால் நமக்கு மின்கட்டணம்தான் எகிறும். ஒரு சில வீடுகளில் எப்போதும் டிவி ஓடிக்கொண்டே இருக்கும். ஆட்கள் இருந்தாலும் அதனை யாரும் பார்ப்பதில்லை. அது தானாக ஓடிக்கொண்டிருக்கும். இதுபோன்ற நிகழ்வுகளை தவிர்த்தால் மின்கட்டணம் அதிகமாவதைக்குறைக்கலாம். எது எப்படியோ 5௦௦ யூனிட்டுக்குள்ளாகவே இருமாதத்திற்கு உபயோகிப்பது நமக்கு என்று மே பாதுகாப்பு
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu