சட்டம் ஒழுங்கு- சமத்துவம் -பாதுகாப்பு முக்கியம்: அதிகாரிகள் மாநாட்டில் முதல்வர் ஸ்டாலின்

சட்டம் ஒழுங்கு- சமத்துவம் -பாதுகாப்பு முக்கியம்: அதிகாரிகள் மாநாட்டில் முதல்வர் ஸ்டாலின்
X
சட்டம் ஒழுங்கு சீரான, சாதிமோதல்கள் அற்ற, மத அடிப்படைவாதம் இல்லாத,பெண்கள் - குழந்தைகளுக்குப் பாதுகாப்பு மிகுந்த மாநிலமாகத் தமிழ்நாடு திகழ வேண்டும் -முதல்வர் ஸ்டாலின்



சட்டம் ஒழுங்கு சீரான, சாதிமோதல்கள் அற்ற, மத அடிப்படைவாதம் இல்லாத,பெண்கள் - குழந்தைகளுக்குப் பாதுகாப்பு மிகுந்த - அச்சமில்லா மாநிலமாகத் தமிழ்நாடு திகழ வேண்டும் என மாவட்ட ஆட்சியர்கள், காவல்துறை - வனத்துறை அலுவலர்கள் மாநாட்டில் முதலமைச்சர் வலியுறுத்தினார். இந்த மாநாட்டில் முன்னுரிமை அளித்துச் செயல்படுத்த வேண்டிய திட்டங்கள் குறித்து பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த அலுவலர்கள் தங்கள் அனுபவங்களைப் பகிர்ந்துகொண்டார்கள்.


மாவட்ட ஆட்சித் தலைவர்கள், காவல் துறை, வனத்துறை அலுவலர்கள் மாநாட்டின் இறுதி நாளில் முதலமைச்சர் ஸ்டாலின் நிறைவுரை ஆற்றினார். அதன் முக்கிய அம்சங்களவான :

குற்றங்களோட விழுக்காட்டைக் குறைப்பது அல்ல, குற்றங்களே நடக்காத சூழ்நிலையை உருவாக்க வேண்டும் என்பது தான் உங்கள் எல்லாரையும் நான் கேட்டுக் கொள்ள விரும்புவது. சாதி மோதல்களை - சட்டம் ஒழுங்கு பிரச்சனையாக மட்டும் பார்க்காதீர்கள் என்று நான் கேட்டுக்கிறேன். ஏனென்றால் அது சமூக ஒழுங்குப் பிரச்சினை. கிராமங்களில் இந்தப் பிரச்சனை அதிகமாக உருவாவதாக எஸ்.பி. அவர்கள் இங்கே பேசும் போது சொன்னார். படிக்காத இளைஞர்களால் மட்டுமல்ல -படித்து முடித்துவிட்டு வேலை கிடைக்காமல் ஊரில் இருக்குற ஒரு சிலராலும் - இதுபோன்ற மோதல்கள் உருவாகக் கூடிய சூழ்நிலை உருவாகிறது. இதுபோன்ற இளைஞர்களைக் கண்டறிந்து மனமாற்றம் செய்யணும். அவர்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்கித் தரணும். ஆக்கபூர்வமான வழிகளில், விளையாட்டுப் போட்டிகளில், ஊர்க்காவல் படைகளில் என அவர்களை நல்வழிப்படுத்த வேண்டும்.


பல்வேறு துறைகளை ஒருங்கிணைத்து செயல்படுறதா நெல்லை எஸ்.பி. சொன்னார். அதேபோல் மற்ற மாவட்ட நிர்வாகமும் செயல்படணும். மத மோதல்கள் குறித்து கோவையில் இயங்குவதைப் போல சிறப்புப் பிரிவு அனைத்து மாவட்டங்களிலும் அமையும், அரசியல் உள்நோக்கத்தோடு மத மோதல்களை திட்டமிட்டு உருவாக்குகிறார்கள், இதை தடுத்தாக வேண்டும். சாதி மோதல்களுக்கும் - மதப் பிரச்னைகளுக்கும் சமூக வலைத்தளங்கள் முக்கியமான காரணமாக இருக்கும், தவறான பதிவுகளை போட்டால் உடனடியாக நடவடிக்கை எடுத்தாக வேண்டும்.


சோஷியல் மீடியா சென்டருக்கு புதிய அலுவலகம் அமைக்கப்படும், சோஷியல் மீடியா மூலமா நடக்குற இந்த வன்மங்களுக்கு, எல்லா வகையிலும் முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். கைதிகளை வீடியோ கான்பரன்ஸ் மூலமாக ஆஜர் செய்தால் நேரமும் மிச்சம், செலவும் மிச்சம் ஆகும். தொழில் நிறுவனங்கள் அதிகம் இருக்கும் பகுதிகள்ல ரவுடிகள் அதிகம் அத்தகைய இடங்கள்ல சட்டம் ஒழுங்கை காக்க வேண்டியது மிகமிக முக்கியம்.

அதேபோல் தொழிற்சாலைகளில் பணிபுரியும் உள்ளூர் மற்றும் வெளி மாநிலத் தொழிலாளர்களின் விவரங்களை வருவாய்த் துறை, காவல் துறை மற்றும் தொழிலாளர் நலத்துறை இணைந்து டாக்குமென்ட் செய்ய வேண்டும். அமைதியான மாவட்டங்களில்தான் - அதிகமான நிறுவனங்கள், தொழில்கள் தொடங்க முன்வருவார்கள். ரவுடிகளுக்கு அதிகாரிகள் உடந்தையாக இருக்கக் கூடாது. ரவுடிகளை இடம், சாதி, மதம் என்று அடையாளப்படுத்தக் கூடாது. சிறார் திருமணங்களைத் தடுக்க வேண்டும்.

தவறு செய்த யாரும் தண்டனையில் இருந்து தப்பி விடக் கூடாது. பட்டாசு மற்றும் தீ விபத்துக்களை தடுப்பதிலும், அதனுடைய பாதிப்புகளைக் குறைப்பதிலும் கவனம் செலுத்த வேண்டும். போதைப் பொருள்களைக் கட்டுப்படுத்த, பள்ளி மற்றும் கல்வி நிறுவனங்கள் அருகே தீவிர கண்காணிப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். NSS மற்றும் NCC மாணவர்களுடன் இணைந்து, போதைப் பொருளுக்கு எதிரான செயல்பாடுகளைக் காவல் துறை மேற்கொள்ளலாம். கடலோர மாவட்டங்களைக் கண்காணிப்பதும், தடை செய்யப்பட்ட இயக்கத்தினர் நம் மாநிலத்துக்குள் ஊடுருவி விடாமல் தடுப்பதும் மிகமிக முக்கியமானதாகும்.

அச்சமில்லாத தமிழ்நாட்டை உருவாக்க, குற்றவாளிகளுக்கு தண்டனை மட்டும் பெற்றுத் தரும் துறையா இல்லாமல் குற்றவாளிகள் உருவாகாமல் தடுக்குற துறையா - காவல் துறை மாற வேண்டும் கோவை மாநகராட்சியில் சிறுவாணி தண்ணீர் குறித்து அரசு விரைவில் முடிவுகள் எடுக்கும். வருவாய், ஊரக வளர்ச்சி, காவல்துறை இந்த மூன்று துறையும் - மாவட்டங்களில் முறையாகச் செயல்பட்டால் - மனுக்கள் வருவது நிச்சயம் குறையும்.

மாற்றுத்திறனாளிகள் அவர்களுக்காக தனியான வேலைவாய்ப்புகள் உருவாக்குறதவிட - இருக்குற வேலைவாய்ப்புகளில் எதில் எல்லாம் அவர்களைப் பங்கெடுக்கச் செய்ய முடியுமோ - அதில் எல்லாம் அவர்களை பங்கெடுக்கக் கூடிய சூழ்நிலையை நீங்கள் ஏற்படுத்தி தர வேண்டும். நீர் இருந்தாலும் - இல்லை என்றாலும் அது நீர் நிலைதான். எனவே, நீர்நிலை ஆக்கிரமிப்பை கவனத்துடன் அணுக வேண்டும்.

வனத் தீயினைக் கட்டுப்படுத்த வனத் துறையின் வீரர்களுக்கு உரிய தீத் தடுப்புக் கருவிகள் வழங்கப்படுவதோடு, துரதிருஷ்டவசமாக அதில் அவர்கள் உயிரிழக்க நேர்ந்தால், முதலமைச்சர் பொது நிவாரண நிதியிலிருந்து அவர்களுக்கு 25 இலட்சம் ரூபாய் வழங்கப்படும். கொரோனா காலத்தில் பெற்றோரை இழந்தவங்களுக்கு இழப்பீடு என்பது உடனடியாக வழங்கப்படணும். இதில் எந்த காரணத்தைக் கொண்டும் காலதாமதம் வேண்டாம் வருவாய் துறையும் தகவல் தொழில் நுட்பத் துறையும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் மாநகராட்சிகளிலும், நகராட்சிகளிலும், பகுதி சபை, வார்டு சபைக் கூட்டங்கள் நடத்தப்பட்டு மக்களின் குறைகள் களையப்படும். குழந்தை திருமணத்தை அனுமதிக்கக் கூடாது.

ஆடு, கோழிகளை வளர்ப்பவர்களே, இடைத்தரகர்கள் இன்றி விற்க உழவர் சந்தைகள் போன்ற அமைப்புகள் ஏற்படுத்தப்படும். புதிதாக தொடங்கப்பட்ட கல்லூரிகளுக்கு உடனடியாக இடம் பார்த்துக் கொடுங்கள், சிறு, குறு நிறுவனங்கள் சாமானியர்களுக்கு வேலைவாய்ப்பைத் தரும் பருவ மழையினால் ஏற்பட்ட சேதங்களைச் சரி செய்ய கூடுதல் தொகை பரிசீலிக்கப்பட்டு தேவைப்படக்கூடிய நிதியை வழங்குவோம்.

அரசுத் துறைகள் முழுமையாக கணினிமயமாக்கப்பட வேண்டும். அனைத்து மின்னணு சேவை மையங்களும் ஆய்வு செய்யப்பட்டு அவற்றின் செயல்பாடுகள் மேம்பட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். ஆதிதிராவிடர் மாணவர் விடுதிகள் சீர்திருத்தப்பட வேண்டும். விடுதிகளில் மாணவர்கள் தங்கும் எண்ணிக்கையை அவ்வப்போது உறுதிசெய்வதோடு, சென்னை போன்ற மாநகரங்களில் தேவைக்கேற்ப கட்டமைப்புகள் விரிவுபடுத்தப்படும்.

'நமக்கு நாமே', 'சமத்துவபுரம்', 'தொகுதி மேம்பாட்டு நிதி ' - ஆகிய திட்டங்களைச் செயல்படுத்த மாவட்ட ஆட்சியர்கள் ஒத்துழைப்பு அவசியம் பட்டா மாறுதல் போன்ற வருவாய்த் துறை இனங்களில் சுணக்கம் ஏற்படாத வண்ணம் விரைவில் நடவடிக்கை எடுக்கத் தேவையான கண்காணிப்புகள் மேற்கொள்ளப்படும். தேங்கியுள்ள பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் . அனைத்துத் திட்டங்களையும் செயல்படுத்த மாவட்ட ஆட்சியர்கள் ஒத்துழைக்கணும். இவற்றில் எந்த தடங்கலும் இருக்கக் கூடாது.

கோடிக்கணக்கான மக்களோட வாழ்க்கை சம்பந்தப்பட்டது இது. கோடிக்கணக்கான பணம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள திட்டங்கள் இவை. இவை அனைத்தையும் நிறைவேற்றும் பொறுப்பு உங்களின் இரண்டு கைகளுக்குத்தான் இருக்கிறது. ஒவ்வொரு திட்டமும் எந்த மாதிரி செயல்பட்டுக் கொண்டு இருக்கிறது என்பதை நாள்தோறும் நீங்கள் கண்காணித்தால் போதும் - அந்தத் திட்டம் மிகச் சிறப்பாகச் செயல்படத் தொடங்கி விடும். அனைவரும் dashboard உருவாக்கி வைத்துக் கொள்ளுங்கள். நாள்தோறும் அதை நான் பார்க்கிறேன். நீங்களும் உங்களது dashboard- இல் உங்களது பணிகளை செதுக்கி வைத்துக் கொள்ளுங்கள். நீங்கள் செய்த பணிகளும் இருக்கட்டும்.செய்ய வேண்டிய பணியும் இருக்கட்டும். என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசினார்.

Tags

Next Story
நோயாளியைப்  பாக்கப்  போறிங்களா..? கட்டாயம் இதெல்லாம்  தெரிஞ்சிட்டு போங்க...!