நீட் நுழைவுத் தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்று கடைசி நாள்
எம்பிபிஎஸ், பிடிஎஸ், சித்தா,ஆயுர்வேதா, யுனானி, ஓமியோபதி உள்ளிட்ட இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கு நீட் தேர்வு அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடத்தப்படுகிறது. ஆண்டுதோறும் மே முதல் வாரத்தில் தேசியத் தேர்வுகள் முகமை சார்பில் இந்தத் தேர்வு நடத்தப்படுவது வழக்கம்.
இந்நிலையில் கொரோனா பரவலால் இந்த ஆண்டு ஆகஸ்ட் 1-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்ட நீட் தேர்வு, பின்னர், செப்டம்பர் 12-ம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. தேர்வுக்கான விண்ணப்பப் பதிவு ஜூலை 13ம் தேதி தொடங்கிய நிலையில், காலக்கெடு இன்றுடன் நிறைவடைகிறது.
இதனால் இன்று அதிகமான நபர்கள் தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
பல்வேறு மாநிலங்களில் ஊரடங்கு அமலில் உள்ள சூழலில், மாணவர்களின் நலன் கருதி நீட் தேர்வு நடைபெறும் நகரங்களின் எண்ணிக்கை155-ல் இருந்து 198 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. தேர்வு மையங்கள் எண்ணிக்கையும் உயர்த்தப்பட்டுள்ளது .
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu