/* */

தமிழ்நாட்டில் ரயில்வே துறை மேம்படுத்தப்படும்: எல்.முருகனிடம் ரயில்வே அமைச்சர் உறுதி

ஈரோட்டில் இருந்து தாராபுரம் வழியாக பழனிக்கு செல்லும் ரயில் பாதை அகலப்படுத்த எல்.முருகன் வலியுறுத்தல்

HIGHLIGHTS

தமிழ்நாட்டில் ரயில்வே துறை மேம்படுத்தப்படும்: எல்.முருகனிடம் ரயில்வே அமைச்சர் உறுதி
X

இந்திய ரயில்வே மாதிரி படம்.

ஈரோட்டில் இருந்து தாராபுரம் வழியாக பழனி செல்லும் புதிய ரயில் பாதை குறித்து மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் ரயில்வே அமைச்சரை சந்தித்து பேசினார்.

ஈரோட்டில் இருந்து தாராபுரம் வழியாக பழனி செல்லும் புதிய அகல ரயில் பாதை குறித்து, மத்திய இணையமைச்சர் டாக்டர் எல் முருகன், மத்தியரயில்வே அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ்வை சந்தித்து பேசினார்.

மக்களின் ஒட்டு மொத்த வளர்ச்சிக்கும், அப்பகுதியின் விவசாய பொருளாதாரத்தை மேம்படுத்தவும் அகலரயில் பாதை அமைக்க வேண்டும் என்பது தாராபுரம் மக்களின் நீண்டகால கோரிக்கையாகும்.

வாரணாசியிலிருந்து காஞ்சிபுரம் வழியாக ராமேசுவரத்துக்கு பயணிகள் விரைவு ரயிலை இயக்க வேண்டும் என்றும் டாக்டர் முருகன் கேட்டுக் கொண்டார். இது பாரம்பரிய நகரமான காஞ்சிபுரத்தை, ராமாயணம் சுற்றுலா இணைப்புப்பாதையோடு இணைக்க உதவும். இது உள்நாட்டு சுற்றுலாவை மேம்படுத்தும்.

ரயில்வே அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் இந்த இரண்டு கோரிக்கைகளையும் விரிவாக விவாதித்தார். மேலும், தமிழ்நாட்டின் ரயில்வேத் துறையை மேம்படுத்த தேவையான அனைத்து உதவிகளையும் செய்து தருவதாக உறுதி அளித்துள்ளார்.

Updated On: 7 Sep 2021 12:16 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    வீட்டிலேயே வலி நிவாரணி எண்ணெய் தயாரிப்பது எப்படி?
  2. லைஃப்ஸ்டைல்
    வெறும் வயிற்றில் கற்றாழை சாறு அருந்துவதால் கிடைக்கும் நன்மைகள் பற்றி...
  3. ஆன்மீகம்
    பழனியில் வரும் ஆகஸ்ட் மாதத்தில், உலக முருக பக்தர்கள் மாநாடு
  4. லைஃப்ஸ்டைல்
    பெண்களுக்கு 7 மணி நேர தூக்கம் போதுமா..? ஆய்வு என்ன சொல்லுது?
  5. லைஃப்ஸ்டைல்
    இரவில் சாப்பிடுவதால் உடல் பருமனை அதிகரிக்கும் 5 உணவுகள் என்னென்ன...
  6. லைஃப்ஸ்டைல்
    சுவையான வத்தக்குழம்பு செய்வது எப்படி?
  7. லைஃப்ஸ்டைல்
    கோடை காலத்தில் தேனின் மருத்துவ குணங்களை தெரிஞ்சுக்குங்க!
  8. தென்காசி
    10ம் வகுப்பில் அதிக மதிப்பெண் எடுத்த மாணவ,மாணவிகளுக்கு பாராட்டு...
  9. சுற்றுலா
    அண்டார்டிகாவில் ஒழுங்குபடுத்தப்பட்ட சுற்றுலா: சுற்றுச்சூழலை காப்பாற்ற...
  10. லைஃப்ஸ்டைல்
    பதப்படுத்தப்பட்ட உணவுகளை உட்கொள்வது ஆபத்து! ஹார்வர்ட் பல்கலைகழக ஆய்வு