உங்களுக்கு தெரியுமா? கே.வி.பள்ளி மாணவர் சேர்க்கை ஆன்லைன் பதிவு துவக்கம்

உங்களுக்கு தெரியுமா? கே.வி.பள்ளி மாணவர் சேர்க்கை ஆன்லைன் பதிவு துவக்கம்
X
கே.வி. எனப்படும் கேந்திரிய வித்யாலயா பள்ளி மாணவர் சேர்க்கைக்கான ஆன்லைன் பதிவு இன்று துவங்கி உள்ளது.

தமிழகத்தில் தலைநகர் சென்னை மற்றும் மாவட்ட தலைநகரங்கள் உள்ளிட்ட முக்கிய நகரங்களில் மத்திய அரசால் நடத்தப்படும் கே.வி.பள்ளி எனப்படும் கேந்திரிய வித்யாலயா பள்ளிகள் இயங்கி வருகின்றன.

மத்திய கல்வி அமைச்சகத்தின் தன்னாட்சி அமைப்பான கேந்திரிய வித்யாலயா சங்கதன் சார்பில் நடத்தப்படும் இந்த பள்ளிகளில் இந்தியா முழுமைக்குமான ஒரே கல்வி கல்விமுறை உள்ளது. மேலும் உயர்கல்வி, குடிமைப் பணிகளுக்கான தேர்வுகள், போட்டித் தேர்வுகளை எதிர்கொள்ளும் வகையில் முதல் வகுப்பிலிருந்தே பாடத்திட்டங்கள் இருப்பதால் இந்த பள்ளிகளில் மாணவர்கள் சேர்ந்து படிப்பதற்கு அதிக ஆர்வம் காட்டி வருகிறார்கள். ஆனால் இந்த பள்ளிகளில் சேர்வது என்பது சாதாரண விஷயமல்ல. குதிரைக்கொம்பு போன்றது.

ராணுவத்தினரின் குழந்தைகள் மற்றும் மத்திய மாநில அரசுகளின் உயர் அதிகாரிகள், ஊழியர்கள், பொதுத்துறை நிறுவன ஊழியர்களின் குழந்தைகளுக்கு கே. வி. பள்ளி மாணவர் சேர்க்கையில் முன்னுரிமை வழங்கப்பட்டு வருகிறது. 2022- 2023 ஆம் கல்வியாண்டிற்கான கே.வி. பள்ளி முதல் வகுப்பு மாணவர் சேர்க்கைக்கு ஆன்லைன் மூலம் பதிவு செய்வது இன்று தொடங்கியுள்ளது. இதில் சேர விரும்பும் மாணவரின் வயது குறைந்த பட்சம் 6 ஆகவும் அதிகபட்சம் 8 ஆகவும் இருக்க வேண்டும்.

இந்த தகுதியுடைய குழந்தைகளின் பெற்றோர் kvsonlineadmission.kvs.gov.in/index.html என்ற இணையதளத்தில் பதிவு செய்ய வேண்டும். புதிய கல்விக் கொள்கை விதிமுறை வழிகாட்டுதல்படி மாணவர் சேர்க்கை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஆன்லைன் மூலம் விண்ணப்ப பதிவு ஏற்றுக் கொள்வதற்கான கடைசி தேதி மார்ச் 21 ஆகும். புதிய கல்விக் கொள்கை விதிமுறை வழிகாட்டுதல்படி மாணவர் சேர்க்கை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஆன்லைன் மூலம் விண்ணப்ப பதிவு ஏற்றுக் கொள்வதற்கான கடைசி தேதி மார்ச் 21 ஆகும். தேர்வு செய்யப்பட்ட மாணவர்கள் முதல் பட்டியல் மார்ச் 25ம் தேதி வெளியிடப்படும்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!