12 திருக்கோயில்களில் இந்த மாதம் குடமுழுக்கு: இந்து சமய அறநிலையத்துறை
மாதிரி படம்
இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள 12 திருக்கோயில்களுக்கு இந்த மாதம், குடமுழுக்கு நடைபெறவுள்ளது. பன்னிரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை திருக்கோயில்களில் திருப்பணிகள் மேற்கொண்டு குடமுழுக்கு நடத்தப்பட வேண்டும். தமிழ்நாட்டில் உள்ள புராதனமான மற்றும் தொன்மையான திருக்கோயில்களை தொன்மை மாறாமல் புதுப்பித்து புனரமைப்புப் பணிக்கான ஒப்புதலுக்கு பரிந்துரை செய்வதற்கு மாநில அளவில் மற்றும் மண்டல அளவில், வல்லுநர் குழுவின் கூட்டம் வாரம் இருமுறை ஆணையர் அலுவலகத்தில் நடைபெற்று 200க்கும் மேற்பட்ட திருக்கோயில்களில் திருப்பணிகளுக்கான ஒப்புதல் அளிக்கப்பட்டு வருகிறது.
அதன்படி இந்த மாதம் 13ம் தேதி அன்று குடமுழுக்கு நடைபெறும் கோவில்கள்:
- கடலூர் மாவட்டம், பெரியகங்கணாங்குப்பம், அருள்மிகு சேமகளத்து மாரியம்மன் திருக்கோயில்,
- திருநெல்வேலி மாவட்டம், மேலநத்தம், அருள்மிகு அருந்தபசு அம்மன் திருக்கோயில்,
- தஞ்சாவூர் மாவட்டம், இரயிலடி, அருள்மிகு சஞ்சீவி ஆஞ்சநேயர் திருக்கோயில்,
- கோவை மாவட்டம், பாப்பநாயக்கன்பாளையம், அருள்மிகு பட்டத்தரசியம்மன் திருக்கோயில்,
- சிவகங்கை மாவட்டம், திருவேகம்பத்தூர் அருள்மிகு ஏகாம்பரநாதசுவாமி திருக்கோயில்
இந்த மாதம் 15ம் தேதி அன்று குடமுழுக்கு நடைபெறும் கோவில்கள்
- விருதுநகர் மாவட்டம், குன்னூர் அருள்மிகு எல்லையம்மன் திருக்கோயில்,
- விருதுநகர் மாவட்டம், வத்ராயிருப்பு நகர், அருள்மிகு கம்மாள கருப்பசாமி திருக்கோயில்,
- காஞ்சிபுரம் மாவட்டம், அருள்மிகு கைலாசநாதர் திருக்கோயில்
திண்டுக்கல் மாவட்டம், பழனி நகர் அருள்மிகு அங்காளம்மன் திருக்கோயிலுக்கு 27 ம் தேதி அன்றும், புதுக்கோட்டை மாவட்டம், அருள்மிகு ஆதிமத்தியார்ஜீனேஸ்வரர் திருக்கோயிலுக்கு அடுத்த மாதம் 9 ம் தேதி அன்றும் குடமுழுக்கு நடைபெறும்
திருப்பூர் மாவட்டம், ஊத்துக்குளி, அருள்மிகு அழகு நாச்சியம்மன் திருக்கோயில் ஆகிய திருக்கோயில்களுக்கு திருப்பணிகள் முடிவுற்று குடமுழுக்கு சிறப்பாக நடைபெறவுள்ளது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu